தமிழ் சீரியல்களின் டாப் 10 வரிசை... முதல் இடத்தில் "எதிர்நீச்சல்”.. மாற்றத்திற்கு காரணம் இதுதானா?
சென்னை: முன்னணி சேனல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 25 ஆவது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியலின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் முதல் முறையாக சன் டிவி எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தை பிடித்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

நகர்ப்புறங்களில் விஜய் டிவி சீரியல் முன்னணியிடத்தை பிடித்திருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களை சேர்த்த அளவில் அதிகமான இடங்களில் சன் டிவி சீரியல்கள் பிடித்திருக்கிறது. அது எது என்பதை விரிவாக பார்க்கலாம்.
1, எதிர்நீச்சல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆதிரை திருமணம் நடைபெற்றதால் இந்த சீரியல் அதிகமான டிஆர்பியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் 11.16 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
2,கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் எப்போதும் முதல் முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் முதலிடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலை விட சில புள்ளிகள் குறைவாக பெற்று இருக்கிறது. அதாவது 10.88 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.85 புள்ளிகள் பெற்றிருக்கிறது.
4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 9. 71 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
5, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இந்த வாரத்தில் 9.62 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
6, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரத்தில் 8.88 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
7, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் 8.74 பெற்று ஏழாவது இடத்தை இருக்கிறது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் டாப் 10 சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
8, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரத்தில் 7.93 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது
9, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரம் 7.01 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.
10, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரத்தில் 6.59 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.
இது இந்த வருடத்தின் 25 வது வாரத்திற்கான கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக பார்க்கப்பட்ட டிஆர்பியின் அளவு படி இந்த புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications