டாப் 10 தமிழ் சீரியல்கள்: முதல் இடத்திற்கு வந்த சிங்கப்பெண்.. சிறகடிக்க ஆசை நிலையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 25வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.

அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

television top 10 serials

1, கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.80 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.74 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, வானத்தைப்போல சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.89 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.

4,மருமகள் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.85 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

5, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.71 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.

6, மல்லி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 6.88 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது.

7,பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் சுந்தரி சிரியல்: இந்த வாரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் சுந்தரி சீரியல் 6.62 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.

8,பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை 6.14 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.

9,கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் விடுமுறை 5.30 புள்ளிகளை பெற்று 9 வது இடத்தை பிடித்திருக்கிறது.

10: ராமாயணம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் சீரியல் 5.05 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+