தமிழ் சீரியல்களின் டாப் 10 வரிசை.. முதல் இடத்தில் "அந்த” சீரியல்.. இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க
சென்னை: முன்னணி சேனல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 26 வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியலின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அதிகமாக பார்க்கப்பட்ட டிஆர்பியின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எந்தெந்த சீரியல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
1, எதிர்நீச்சல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் முதலிடத்தை முதல் முறையாக பிடித்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது இந்த வாரமும் 10.83 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஆதிரை திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அதை தொடர்ந்து சீரியல் விறுவிறுப்பு ஏற்பட்டது காரணமாக இந்த சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தில் தொடர்கிறது.
2, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இதுவரைக்கும் அதிகமான முறை முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த வாரமும் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதுபோல இந்த வாரமும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 10.64 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
3, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரம் நான்காவது இடத்தை பிடித்திருந்த நிலையில் அதை தொடர்ந்து இந்த 9.55 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

4, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது இந்த வாரம் 9.4 பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
5, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.08 பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
6, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த வாரம் 9.04 பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது.

7, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தை பிடித்திருந்தது. அதுபோலவே இந்த வாரமும் 8.23 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் தொடர்கிறது.
8, பாண்டியன் ஸ்டோர் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த வாரத்தில் எட்டாவது இடத்தை பிடித்திருந்தது அதேபோல இந்த வாரமும் 7.02 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

9, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் பத்தாவது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த வாரம் 6.43 புள்ளிகள் பெற்று 9 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.
10, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்த வாரத்தில் 6. 24 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தில் இருக்கிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications