Top 10 Serial: இந்த வார டிஆர்பியில் மாற்றம்.. மாஸ் காட்டிய எதிர்நீச்சல், பின்னுக்கு தள்ளப்பட்ட அய்யனார் துணை
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 26-வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.
அதனால் டிஆர்பி தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

1, சிங்கப்பெண்ணே சீரியல்
சன் டிவியில் கடந்த இரண்டு வரங்களாக முதலிடத்தை இழந்த சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் மீண்டும் முதலிடத்திற்கு வந்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 9.85 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
2, மூன்று முடிச்சு சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கடந்த இரண்டு வாரங்களாக முதலிடத்தில் இருந்தது . மூன்று முடிச்சு மற்றும் மருமகள் ஆகிய இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் ஒளிபரப்பாகி வந்ததால் இந்த சீரியல்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக முதலில் இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இப்போது 9.55 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
3, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 9.13 புள்ளிகளைப் பெற்று மீண்டும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
4, மருமகள் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் கடந்த வாரம் வரைக்கும் மூன்று முடிச்சு சீரியல் உடன் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வந்தது. அதனால் அதிக டிஆர்பி பெற்று முதல் இடத்தில் இருந்த நிலையில் இப்போது 8.21. பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
5, எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான் இந்த வார டி ஆர் பி யில் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. கடந்த வாரம் இந்த சீரியலில் பல எதிர்பாராத சிற்பங்கள் வந்ததால் இந்த சீரியல் 7.93 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது
6, சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் நான்கு இடத்தை பிடித்துக் கொண்டு இருந்த நிலையில் இந்த வாரத்தில் 7. 85 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
7, அன்னம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அண்டம் சீரியல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியல் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.67 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்திற்க்கு வந்திருக்கிறது.
8, அய்யனார் துணை சீரியல்
விஜய் டிவியில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.43 புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.
9, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரத்தில் 8வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தில் 6. 40 புள்ளிகளை பெற்று 9-வது இடத்திற்கு வந்திருக்கிறது.
10, ராமாயணம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரமாயணம் சீரியல் கடந்த வாரத்தில் ஒன்பதாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தில் இந்த சீரியல் 6.21 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications