இந்த வார டாப் 10 சீரியல்களின் வரிசை.. முதல் இடத்தில் ஏற்பட்ட அதிரடி "மாற்றம்”.. காரணம் இதுதானா..?
சென்னை: முன்னணி சேனல்களின் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 27 வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களில் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதில் எந்தெந்த சீரியல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம். கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் பல சீரியல்கள் அதிரடி மாற்றம் அடைந்திருக்கிறது.
1, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த இரண்டு வாரங்களாக இரண்டாவது இடத்தில் இருந்த இந்த வாரம் மீண்டும் தன்னுடைய முதல் இடத்தில் அமர்ந்திருக்கிறது. அதுவும் இந்த வாரத்தில் 11.14 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் கடந்த இரண்டு வாரங்களாக முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் இந்த வாரம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 10. 88 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
3, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியல் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.87 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

4, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் நான்காவது இடத்தில் 9.73 புள்ளிகளை பெற்று பிடித்திருக்கிறது.
5, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.58 பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.
6, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.35 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
7, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தை பிடித்திருந்தது. அதேபோலவே இந்த வாரமும் 8.75 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

8, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரமும் எட்டாவது இடத்தில் இருந்தது. அதேபோலவே இந்த வரமும் 7.24 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது.
9, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரம் பத்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6.62 பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.
10, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இந்த வாரம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஒன்பதாவது இடத்தை பறிகொடுத்து பத்தாவது இடத்தில் 6.61 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
-
சென்னையை விட்டு கிராமத்துக்கு போக போறேன்.. இதுதான் காரணம்! உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications