இந்த வார டாப் 10 சீரியல்கள்.. எகிறி அடித்த “எதிர்நீச்சல்”.. கலக்கிய விஜய் டிவி “பிரபல” சீரியல்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 29 வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த தகவல்கள் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் எந்தெந்த சீரியல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

1, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் அதிகமான டிஆர்பியை பெற்றிருக்கிறது. அதாவது 11.71 பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் இந்த வாரத்தை விட அதிகமான புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதாவது 11.24 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

3, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 10.13 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
4, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இந்த வாரத்தில் 9.68 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தை போலவே நான்காவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

5, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் 9.45 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் வந்திருக்கிறது.
6, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தில் 9.07 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறது.

7, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 8.37 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
8, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரம் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.65 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகமான டிஆர்பி அளவைப் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

9, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6.84 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் ஒன்பதாவது இடத்தை தக்க வைத்து இருக்கிறது.
10, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6. 43 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications