Top 10 Tamil Serial: மீண்டும் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை.. ஆனால் டிஆர்பி இப்படி ஆகிவிட்டது!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் முன்னிலை வகித்து வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகமாக கவரப்படுகிறது. தொலைக்காட்சியில் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்ட சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 30-வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் தரவரிசை வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அதற்கு போட்டியாக பல சேனல்கள் புதியது புதிதாக தொடங்கி. இருக்கின்றனர் அதிலும் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களையும் ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனாலேயே இந்த இரண்டு சேனல்களும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் சீரியல்களில் பல திருப்பங்களை கொண்டு வந்திருக்கின்றனர்.

கடந்த வாரத்தில் வெளியான டிஆர்பி ரேட்டிங்படி முதல் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பிடித்திருந்தாலும் அதைத் தொடர்ந்து அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் முன்னணி வகித்தது. ஆனால் இந்த வாரத்தில் நிலைமையே வேறு விதமாக மாறி இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 4வது முறையாக இந்த வாரமும் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதன்படி மற்ற சீரியல்கள் இந்த வாரத்தில் பெற்ற இடத்தை பார்க்கலாம்.
அதில் முதலிடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 9. 18புள்ளிகளை பெற்று இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்சிங்க பெண்ணே சீரியல் 8.67 புள்ளிகளை பெற்றிருக்கிறது. மூன்றாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 8.40 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
நான்காவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 8. 04 புள்ளிகளை பெற்றிருக்கிறது. ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 7.75 புள்ளிகளை பெற்றிருக்கிறது. ஆறாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் 7.56 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஏழாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 7.03 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எட்டாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.88 புள்ளிகளை பெற்றிருக்கிறது. ஒன்பதாவது ஆவது இடத்தில் சுந்தரி சீரியல் 6.62 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இறுதியாக பத்தாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 5.73 புள்ளிகளை பெற்று இருக்கிறது.இது கடந்த வார 7 நாட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டிஆர்பியின் அளவுகளின்படி இந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் டிஆர்பியில் முதல் இடத்தில் இதுவரைக்கும் சன் டிவி சீரியல்கள் தான் இருந்து வந்தது. பல வருடங்களுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் சன் டிவிக்கு போட்டியாக முன்னேறி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் சன் டிவி தன்னுடைய இடத்தை பிடித்து விட்டது.
இந்த நிலையில் தற்போது மூன்று வாரங்களாக சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களில் இந்த சீரியல்கள் பெற்று இருந்த புள்ளிகளை விட தற்போது பெற்றிருக்கும் புள்ளிகள் குறைவாகத்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications