இந்த வார டாப் 10 சீரியல்கள்.. தரவரிசையில் இத்தனை டுவிஸ்ட்..! இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டிஆர்பியின் அடிப்படையில் இந்த வருடத்தின் 32வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரத்தில் இருந்த நிலையை விட இந்த வாரம் பல சீரியல்கள் எதிர்பாராத இடங்களை பிடித்திருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த தகவல்கள் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டி ஆர்பியின் அடிப்படையில் வெளியாகி இருக்கிறது.
1, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தை தொடர்ந்து இந்த வாரமும் முதல் இடத்தை தக்க வைத்து இருக்கிறது. இந்த வாரம் கயல் சீரியல் 11. 65 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதே போலவே இந்த வாரமும் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்கிறது. இந்த வாரத்தில் 10. 22 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
3, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 9.62 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தை போலவே மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

4, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் இந்த வாரம் 9.25 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் நான்காவது இடத்தில் இருக்கிறது.
5, இனியா: சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் இந்த வாரத்தில் 8.84 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
6, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் இந்த வாரத்தில் 8.43 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தைப் போலவே ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
7, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 6.98 புள்ளிகளை பெற்று கடந்த வாரத்தை போலவே ஏழாவது இடத்தில் இருக்கிறது.
8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 6.92 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

9, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் 6.62 புள்ளிகளை பெற்று 9 வது இடத்தில் இருக்கிறது.
10, கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இந்த வாரத்தில் 5.96 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தில் இருக்கிறது.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!











Click it and Unblock the Notifications