இந்த வார டாப் 10 சீரியல்கள்.. எதிர்நீச்சல் செய்த சாதனை.. போட்டிக்கு வந்த விஜய் டிவி சீரியல்
சென்னை: முன்னணி சேனல்களின் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் இந்த வருடத்தின் 34 வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் விவரம் வெளியாகி இருக்கிறது.
அதில் கடந்த வாரத்தில் இருந்த நிலையை விட இந்த வாரம் பல சீரியல்கள் எதிர்பாராத இடங்களை பிடித்திருக்கிறது.

அதுபோல இந்த தகவல்கள் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பியின் அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்
1, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 11.45 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
2, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் பல வாரங்களாகவே முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 11.39 புள்ளிகளை பற்றி இரண்டாவது இடத்தில் வந்திருக்கிறது.
3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த வாரம் 9.97 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் நாலாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த வாரத்தில் 9.83 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
5, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தை போலவே ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 9.42 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
6, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்தது. அதுபோல இந்த வாரமும் 8 புள்ளி 47 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.
7, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் ஒன்பதாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.25 புள்ளிகளை பற்றி ஏழாவது இடத்தில் இருக்கிறது.

8, பாண்டியன் ஸ்டோர் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த வாரத்தில் பத்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தில் 7. 96 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
9, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தில் 7.76 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது.
10, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6. 33 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications