இந்த வார டாப் 10 சீரியல்கள்.. சன் டிவி சீரியல்களை பின் தள்ளிய விஜய் டிவி சீரியல்.. எதிர்பாராத மாற்றம்
சென்னை: முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 38 வது வாரத்திற்கான இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களில் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.
1, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து காலமானதால் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வாரம் இந்த சீரியல் 9.88 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.
2, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் ஒரு சில வாரங்களாகவே இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரமும் 9.61 புள்ளிகளை பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்திலும் மூன்றாவது இடத்தில் இருந்தது அதுபோல இந்த வாரத்திலும் 9.12 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரமும் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் எந்த வாரமும் 8. 95 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
5, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த முறை இந்த சீரியல் 8.17 புள்ளிகளை பற்றி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது.
6, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் பல வாரங்களாகவே ஐந்தாவது இடத்தில் இருந்து வந்தது ஆனால் இந்த முறை 8.16 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
7, மிஸ்டர் மனைவி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்தது. அதே போலவே இந்த முறையும் ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த வாரத்தில் 7.86 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

8,பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தில் எட்டாவது இடத்தில் இருந்தது. அது போலவே இந்த வாரமும் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த முறை 7.65 புள்ளிகள் பெற்றிருக்கிறது.
9, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த முறை பத்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6.70 புள்ளிகளை பற்றி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
10, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரம் 10 இடத்திற்குள் வராமல் இருந்த நிலையில் இந்த முறை 6.27 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தில் இருக்கிறது.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications