இந்த வார டாப் 10 சீரியல்.. சன் டிவியில் அமர்க்களப்படுத்திய புது சீரியல்.. சிறகடிக்க ஆசையின் பரிதாபம்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 41வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
அதில் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அதுபோல இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.
1, கயல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த வாரத்தில் 10. 81 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
2, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு 10.66 புள்ளிகளை பெற்று வந்திருக்கிறது.
3, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் 10.42 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.
4, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்தது. அதேபோல இந்த முறையும் 10.33 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
5, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிங்க பெண்ணே சீரியல் 10.28 புள்ளிகளை பெற்று இந்த முறை ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருக்கிறது.

6, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.67 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.
7, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்தது அதுபோலவே இந்த முறை 7.60 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது.
8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.54 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது.
9, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.46 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது.
10, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.28 புள்ளிகளை பெற்று 10-வது இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த சீரியல் ஒளிபரப்பாகும் 9 மணி நேரத்திற்கு சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியல் டிஆர்பி யில் அடிவாங்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications