Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த வார டாப் 10 சீரியல்.. முதல் இடத்தில் எதிர்பார்க்காத சீரியல்.. புது சீரியலுக்கு இவ்வளவு மவுசா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 43வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

அதில் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அதுபோல இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

Tamil TV Channel TRP Rating 43th week 2023 top 10 serial in rural and urban

1, வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் கடந்த வாரத்தில் முதலிடத்தில் இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. இந்த வாரத்தில் 11.44 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

2, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில்இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் இரண்டாவது தக்க வைத்திருக்கிறது. 10.58 புள்ளிகளை பெற்று பெற்றிருக்கிறது.

3, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 10.41 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

4, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இருந்த நிலையில் 10.38 புள்ளிகளை பெற்று இந்த முறை நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது. இது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருக்கிறது.

5, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.91 புள்ளிகளை பெற்ற ஐந்தாவது இடத்திற்கு வந்திருக்கிறது

6, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.10 புள்ளிகளை பெற்று அதுபோலவே இந்த முறை ஆறாவது இடத்தில் இருக்கிறது.

7, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் 9-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.50 புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 43th week 2023 top 10 serial in rural and urban

8, சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.04 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது.

9, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் கடந்த வாரத்தில் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 6.79 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் இருக்கிறது.

10, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கடந்த வாரத்தில் ஏழாவது இடத்தில் இருந்தது இந்த முறை 6.65 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+