இந்த வார டாப் 10 சீரியல்.. முதல் இடத்தில் புது சீரியல்.. பின் தங்கிய கயல், வானத்தைப்போல.. பல மாற்றம்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 45வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
அதில் எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

அதுபோல இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகரப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.
1, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 10.28 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது.
2. கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 10.23 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
3,எதிர்நீச்சல் சீரியல் மற்றும் வானத்தைப்போல சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மற்றும் வானத்தைப்போல சீரியல் இந்த முறை 9.76 புள்ளிகளை பெற்று இரண்டு சீரியலும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

4, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 9.39 புள்ளிகளை பெற்ற நான்காவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.
6, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.46 புள்ளிகளை பெற்று அதுபோலவே இந்த முறை ஆறாவது இடத்தில் இருக்கிறது.
7, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் 8-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.32புள்ளிகளை பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது.

8, சிறகடிக்க ஆசை சீரியல் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை 6.97 புள்ளிகளை பெற்று இரண்டு சீரியலும் 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.
9, ஆஹா கல்யாணம் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் கடந்த வாரத்தில் முதல் 10 இடங்களுக்குள் இல்லாத நிலையில் இந்த வாரம் 6.12 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது.
10, கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் கடந்த வாரத்தில் முதல் 10 இடங்களுக்குள் இல்லாத நிலையில், இந்த வாரம் 5. 71 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications