டாப் 10 தமிழ் சீரியல்கள்:சன் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி சீரியல்.. TRPயில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 7வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.

இதற்கு சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் கடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது சுந்தரி, ஆனந்த ராகம் சீரியல் போன்ற சில சீரியல்கள் டிஆர்பியில் அதிகமாக அடி வாங்கி இருக்கிறது. அதே நேரத்தில் கார்த்திகை தீபம் சீரியல் பல வாரங்களுக்கு பிறகு இந்த முறை டாப் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 7th week 2024 top 10 serial in rural and urban

அதுபோல எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

1, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.30 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

2, வானத்தைப்போல சீரியல் மற்றும் எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் மற்றும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் 10.68 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, கயல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 10.60 புள்ளிகளை பெற்று 3வது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

4, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.35 புள்ளிகளை பெற்று 5வது இடத்தை பிடித்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 7th week 2024 top 10 serial in rural and urban

5, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.26 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.

6, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 7வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.24புள்ளிகளை பெற்று இந்த முறை 7வது இடத்தில் இருக்கிறது.

7, பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் மகா சங்கமம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் சேர்ந்து மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த முறை 7.60 புள்ளிகளை பெற்று 7வது இடத்தை பிடித்திருக்கிறது.

Tamil TV Channel TRP Rating 7th week 2024 top 10 serial in rural and urban

8, மகாநதி சீரியல் மற்றும் ஆஹா கல்யாணம் சீரியல் மகா சங்கமம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் மற்றும் ஆஹா கல்யாணம் சீரியல் கடந்த வாரத்தில் 5.76 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

9, கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பல வாரங்களுக்கு பிறகு இந்த முறை 5.71 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்திருக்கிறது

10, ஆனந்த ராகம் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியல் கடந்த வாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 5.47 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+