Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அய்யனார் துணை
சென்னை: தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி இருக்கிறது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல் தான் அதிகமான ரேட்டிங் பெற்று இருக்கிறது. விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கு இடையே அதிக போட்டி இருக்கிறது. எந்த சீரியல் எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.

1, மூன்று முடிச்சு சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 8.73 டிஆர்பி புள்ளிகளை பெற்று, கடந்த வாரத்தை ஒப்பிடும்போது சிறிது சரிவு இருந்தாலும் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்து இருக்கிறது.
2, சிங்கப்பெண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 7.57 டிஆர்பி புள்ளிகளுடன், கடந்த வாரத்தை விட சரிவு இருந்தாலும் இரண்டாம் இடத்தில் நிலைத்திருக்கிறது.
3, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 7.31 டிஆர்பி புள்ளிகள் பெற்று, பெரிய மாற்றமின்றி மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளது.
4, அய்யனார் துணை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் 6.85 டிஆர்பி புள்ளிகளுடன், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
5, மருமகள் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் 6.69 டிஆர்பி புள்ளிகளுடன், சிறிய சரிவுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

6, சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை இந்த வாரம் 6.46 டிஆர்பி புள்ளிகள் பெற்று, லேசான வீழ்ச்சியுடன் ஆறாம் இடத்தில் உள்ளது.

7, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 6.19 டிஆர்பி புள்ளிகளுடன், கடந்த வாரத்தை விட முன்னேற்றம் கண்டு ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.
8, அன்னம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் இந்த வாரம் 6.15 டிஆர்பி புள்ளிகள் பெற்று, சிறிய சரிவுடன் எட்டாம் இடத்தில் உள்ளது.
9, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது இந்த வாரம் 5.56 டிஆர்பி புள்ளிகளுடன், குறிப்பிடத்தக்க வீழ்ச்சியுடன் ஒன்பதாம் இடத்தில் உள்ளது.
10 , சின்ன மருமகள் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 5. 50 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.











Click it and Unblock the Notifications