தமிழை மிரட்ட வந்த ராகினிக்கு தெரிய வந்த உண்மைகள்.. கோதை சொன்ன வார்த்தை.. கோபத்தில் நடேசன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் செப்டம்பர் 13-ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அர்ஜுன் தன்னை தமிழ் அடித்து விட்டான் என்று ராகினியிடம் சென்று நடிக்க அதைக் கேட்டு கோபமான ராகினி தமிழிடம் சண்டை போடுவதற்காக அவருடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அப்போது பல உண்மைகள் ராகினிக்கு தெரிய வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் ஜெயந்தி வீட்டிலிருந்து போன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அம்மா கிச்சனில் இருந்தபடியே வீட்டு வேலை செய்ய வர சொல்லிக் கூப்பிட, அதற்கு ஜெயந்தி தன்னால் முடியாது. நாம இப்போ இங்க வீட்டு வேலைக்காரங்க கிடையாது. நாம இப்ப இந்த வீட்டின் முதலாளி என்று சொல்லி கொண்டு இருக்க அந்த நேரம் அபி வருகிறார்.

அப்போது அபியை பார்த்ததும் ஜெயந்தியும் அவருடைய அம்மாவும் நீ எதுக்கு இங்க வந்தா? அதான் அவங்க கூட போயிட்டியே இப்போ எதுக்கு இங்க வந்தா? என்று கேட்க, ராகினி தான் என்ன வர சொன்னாங்க என்று அபி சொல்கிறார். அந்த நேரத்தில் ராகினியும் வந்து நான் தான் அவங்கள வர சொன்னேன். என்கூட அவள் இருக்கட்டுமே? நீ உள்ள வா அபி என்று கூப்பிட்டு போக அந்த நேரத்தில் அர்ஜுனும் அவருடைய மாமாவும் அடிபட்ட காயத்தோடு கட்டு போட்டு வருகின்றனர்.
இதை பார்த்ததும் பதறிப்போன ராகினி என்ன ஆச்சு என்று கேட்க, அர்ஜுன் மாமா தமிழ் அடித்த விஷயத்தை பற்றி சொல்ல கோபமான ராகினி அர்ஜுனை கூட்டிட்டு தமிழ் வீட்டிற்கு போகிறார். அதே நேரத்தில் தமிழ் வீட்டில் நடேசன்க்கு அபியை ராகினி வீட்டுக்கு அனுப்பி வைத்த விஷயம் பெரிய அதற்காக கோதையோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது ராகினி அர்ஜுனை கூட்டிட்டு வந்து எதுக்காக அடிச்சீங்க? குடும்பமா சேர்ந்து என் புருஷனை கொலை பண்ணலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கீங்களா௺ என்று திட்டுகிறார். அதோடு நான் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போகிறேன் என்று சொல்ல, அதற்கு நமச்சி கொண்டு போய் குடுமா சும்மா இருந்த எங்க கூட சண்டைக்கு வந்ததே இவங்கதான். அதுவும் உன் புருஷன் தமிழை கட்டையால் அடிக்க வந்தான். இது உங்க கம்பெனி வாசலில் தான் நடந்துச்சு. எல்லோரும் பார்த்துட்டு தான் இருந்தாங்க போலீஸ் வந்து விசாரிக்கட்டும் அப்போது யார் மேல தப்பு என்று தெரிந்திடும் என்று சொல்கிறார்.
இதைக் கேட்டதும் அர்ஜுன் வா ராகினி நாம போகலாம். இவங்க கிட்ட எல்லாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்று நடிக்க, ராகினி போலீசுக்கு போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தலைசுற்றி மயங்கி விழுந்து விட அர்ஜுன் அவரை ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போகிறார். அங்கு டாக்டர் அர்ஜுனிடம் ராகினியை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.
அப்போது அர்ஜுன் இந்த பிரச்சனைகளை எல்லாம் மறந்துருங்க, ராகினியை சந்தோசமா வச்சி இருப்போம் என்று அவருடைய குடும்பத்திற்கு அட்வைஸ் பண்ணுகிறார். அதே நேரத்தில் கோதை ராகினியை பார்க்க போக வேண்டும் என்று சொல்ல, நடேசன் திட்டுகிறார். இதனால் கோதை அபிக்கு போன் பண்ணி ராகினி நிலைமை பற்றி விசாரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications