தமிழும் சரஸ்வதியும்: அர்ஜுனின் மாமாவால் ஆபத்தான நிலையில் ராகினி.. அண்ணன் பாசத்தால் தமிழ் செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ராகினியை காரில் கூட்டிக் கொண்டு வரும் அர்ஜுன் மாமா குடித்திருப்பதால் காரை ஆக்சிடென்ட் செய்து விடுகிறார்.

ஆபத்தான நிலையில் ராகினியை தமிழ் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். இதனால் இக்கட்டான பிரச்சனையில் சிக்குகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அர்ஜுனின் பழிவாங்கும் படலம்: அந்த வகையில் கோதை குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று அர்ஜுன் புதியது புதியதாக பிளான் போட்டுக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் இப்போது தமிழ் கம்பெனியை தீப்பிடிக்க வைத்து பொருட்களை எல்லாம் நாசம் அடைய வைத்திருந்தார். அதோடு விடாமல் தமிழுக்கு யாரிடமும் பணம் கிடைக்க விடாமலும் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று வீட்டு பெண்கள் தங்களுடைய கழுத்தில் இருக்கும் தாலி முதற்கொண்டு அனைத்து நகைகளையும் கழட்டி கொடுத்து இருந்தனர். அதை கேள்விப்பட்டதும் மனம் கேட்காமல் ராகினி நான் 40 லட்சம் கொடுக்கப் போறேன் என்று சொல்ல அதை கேட்டு அதிர்ச்சியான அர்ஜுன் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரி என்று சம்மதித்து ராகினியை அனுப்பி வைத்துவிட்டு தமிழுக்கு போன் போட்டு தமிழை அவமானப்படுத்தி இருந்தார்.

அதனால் ராகினி கொடுத்த செக்கை எங்களுக்கு தேவை இல்லை என்று தமிழ் அனுப்பி இருக்கும் நிலையில் அடுத்து கம்பெனி தொடங்குவதற்கு என்ன செய்ய என்று வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வார ப்ரோமோ: அதில் ராகினி அர்ஜுனின் மாமாவோடு காரில் போய்க்கொண்டிருக்கிறார்.அப்போது அவர் போதையில் இருப்பதால் காரை நிதானம் இல்லாமல் ஓட்டிக்கொண்டு போகிறார். அந்த பக்கமாக வரும் தமிழ் மற்றும் நமச்சி இதை கவனித்து விடுகிறார்கள். கூடவே அவர்கள் கண் முன்னாடியே அர்ஜுனின் மாமா காரை ரோட்டின் ஓரத்தில் இடித்து விடுகிறார்.

அப்போது ஓடி வந்து ஐயோ ராகினிக்கு ஏதோ ஆயிட்டா என்று பதறி போய் தமிழ் ராகினியை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார்.
கூடவே பயப்படாத ராகினி நான் கூட இருக்கிறேன் என்று தைரியம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து ராகினிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நமச்சி நீ கம்பெனிக்கு உடனே போ இல்லன்னா இப்போ இருக்கிற வாய்ப்பும் நம் கை விட்டு போய்விடும் என்று சொல்ல,
எனக்கு முதலில் என் தங்கச்சியோட உயிர் தான் முக்கியம் என்று அந்த இடத்தை விட்டு தமிழ் போக மறுத்து அங்கேயே நிற்கிறார். இதை பார்த்து அர்ஜுன் யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இனி தமிழில் கேரக்டரை அர்ஜுன் புரிந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications