தமிழுக்கு தெரியாமல் வளைகாப்புக்கு போன கோதை.. அர்ஜுன் திட்டம்.. வெளிவந்த உண்மை.. திடீர் திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் 20ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோதை குடும்பத்தை எப்படியாவது வளைகாப்புக்கு வர வைத்து அவமானப்படுத்த வேண்டும் என்று அர்ஜுன் புது பிளான் போடுகிறார்.

அர்ஜுன் வலையில் கோதை குடும்பம் சிக்கிக் கொள்ள கடைசியில் தமிழ் அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எபிசோடின் ஆரம்பத்தில் ராகினியிடம் போன் பேசிட்டு இருந்த கோதையை நடேசன் திட்டுகிறார். உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா என்று போனை வாங்கி ராகினியையும் திட்டுகிறார். அப்போது என்னை இனி அப்பா என்று கூப்பிடாத, அப்படி கூப்பிட உனக்கு வெட்கமா இல்லையா என்று நடேசன் திட்ட அதைக் கேட்டு ராகினி அழுகிறார்.

இதனால் ராகினி அர்ஜுனிடம் சென்று இந்த வளைகாப்பு வேண்டாம். எங்க வீட்டிலிருந்து யாரும் வர மாட்டாங்க. என்னையும் எங்க அப்பா போனில் நல்லா திட்டிட்டாரு என்று சொல்ல, அர்ஜுன் கவலைப்படாத வா நாம போகலாம். அவங்க கட்டாயம் வருவாங்க. நீ போய் ரெடி ஆகு என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய குடும்பத்தாரிடம் எப்படியாவது அவங்களை வர வைக்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று பிளான் போடுகிறாரர்.
அதை தொடர்ந்து அபி கிச்சனுக்கு போவதை பார்த்த அர்ஜுனனின் மாமா நல்லவர் போல பரிதாபமாக அர்ஜுன் கிட்ட பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அர்ஜுனும் ராகினிக்கு பிடிக்காத இந்த வளைகாப்பு கட்டாயம் பண்ணனுமா? என்று தான் எனக்கும் தோணுது. அவங்க வீட்டுக்காரங்க வந்து இந்த விஷயத்தை பண்ணுனா அவ சந்தோஷப்படுவா என்று தான் நான் நினைச்சேன். ஆனா அது இப்ப நடக்காது போல இருக்கு என்று பீல் பண்ணி பேச, அதை கேட்டு அபி சரஸ்வதிக்கு போன் பண்ணி இங்கே நடப்பது பற்றி சொல்கிறார்.

அதற்கு சரஸ்வதி கோதையிடம் சென்று வளைகாப்பு நடக்குமானு தெரியலையே, நாம அங்க போகலாமா அத்தை என்று கேட்க அதற்கு கோதையும் சம்மதிக்க, சரஸ்வதி கோதையையும், வசுவையையும் கூட்டிவிட்டு கோவிலுக்கு போகிறார். அங்கு அர்ஜுன் அடியாள்களை கோயிலுக்கு வரவைத்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தமிழுக்கு போதை வளைகாப்பில் கலந்து கொள்வது பற்றி தெரிய வைக்க கம்பெனியில் இருக்கும் ஒருவர் மூலமாக தெரிய வைக்கிறார்.

அதை கேட்டு கோபமான தமிழ், நடேசன், கார்த்திக், நமச்சி எல்லோரும் கோதையை தடுத்து நிறுத்த கோவிலுக்கு வருகின்றனர். அதே நேரத்தில் கோவிலுக்கு வந்த கோதை, சரஸ்வதி, வசு எல்லாரையும் அர்ஜுன் வரவேற்கிறார். அப்போது சரஸ்வதி அர்ஜுனை திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications