அர்ஜுனின் நரித்தனத்தை தெரிந்த கோதை..மேக்னாவிற்கு தெரிய வந்த உண்மை.. மாறிப்போன கதைக்களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.

அதில் தமிழும், நமச்சியும் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து தப்பித்து மேக்னாவை சந்திக்க வந்திருக்கின்றனர்.

tamilum saraswathiyum serial 26th October promo and episode full update

அதே நேரத்தில் அர்ஜுன் கோதை மற்றும் வசுவிடம் மீண்டும் திமிராக பேசி அவமானப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் மேக்னாவிடம் டாக்டர்கள் வந்து நல்ல வேலை உங்களுக்கு எதுவும் ஆகவில்லை. உங்கள் புடவையை உருவியதால்தான் நீங்கள் எந்த காயமும் இல்லாமல் தப்பித்து இருக்கிறீர்கள். நீங்கள் கட்டியிருந்த புடவையில் தீப்பிடித்திருந்ததற்கு அதை உருவாமல் விட்டிருந்தால் உங்கள் உடம்பில் அது ஒட்டி ரொம்ப பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லி கொண்டிருக்கின்றனர் .

tamilum saraswathiyum serial 26th October promo and episode full update

அதைத்தொடர்ந்து தமிழையும் நமச்சியையும் அடியாட்கள் கட்டி வைத்து அவர்களிடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்க பாஸ் வந்ததும் உங்களுடைய கதை முடியப்போகுது. அதற்கு முன்பு இதை சாப்பிட்டுக்கோங்க என்று அவர்களுடைய கட்டை அவிழ்த்து விடுகின்றனர். அப்போது தமிழ் அங்கு வெளியே போவதற்கு ஒரு இடம் இருப்பதை சுட்டிக்காட்டி அந்த வழியாகவே தமிழும் நமச்சியும் வெளியே தப்பி ஓடி வந்து விடுகின்றனர்.

அதே நேரத்தில் சரஸ்வதியும் கோதையும் தெருவில் நடந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் அர்ஜுன் மீண்டும் நீங்கள் அவமானப்பட போறீங்க உங்களால ப்ராஜக்ட்டை செய்து கொடுக்க முடியாமல் ஆகிவிட்டது. உதவி கேக்க போன உங்க புருஷன் இன்னும் போன் பண்ணலையாமே என்று அவமானப்படுத்தி நக்கல் செய்ய அதற்கு கோதையும் சரஸ்வதியும் நீ அப்போ ஹாஸ்பிடலில் நல்லவன் மாதிரி பேசின இப்போ இப்படி பேசுற எல்லாம் நடிப்புதானா?

tamilum saraswathiyum serial 26th October promo and episode full update

நீ என்னைக்குமே திருந்த மாட்டியா என்று திட்ட அதற்கு அன்னைக்கு தமிழ் என் குழந்தையோட உயிரை காப்பாற்றினார். அதனால அவருக்கு நன்றி சொன்னேன். அவ்வளவுதான் மத்தபடி உங்க மேல இருக்கிற என்னோட கோபம் என்னைக்குமே போகாது உங்களால அந்த ப்ராஜக்ட்டை செய்து கொடுக்க முடியாது என்று மீண்டும் வில்லனாக பேச அதற்கு சரஸ்வதி என் புருஷன் கண்டிப்பா அந்த ஆர்டர் செஞ்சு குடுத்து நாங்க பழைய நிலைமைக்கு வருவோம் என்று சபதம் போட்டுக்கொண்டு கிளம்பி போகின்றனர்.

அதை தொடர்ந்து தமிழை கட்டி வைத்து இருந்த இடத்திற்கு மேக்னாவின் மாமா வந்து பார்க்க அங்கு தமிழும் நமச்சியும் இல்லாததை கண்டு அவர் கோபத்தில் அடி ஆட்களை திட்டி தேடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கார்த்திகிற்கு ஆர்டர் கொடுத்தவர்கள் போன் செய்து ப்ராடக்ட் ரெடியாகிவிட்டதா என்று கேட்க நாங்கள் எப்படியாவது உங்களுக்கு முடித்து தந்து விடுவோம் என்று கார்த்திக் சொல்ல அதற்கு அவர் இன்னும் நீங்கள் ஆரம்பிக்கவே இல்லையா? என்று திட்டி விட்டு போனை வைக்கிறார்.

அந்த நேரத்தில் வெளியே தப்பித்து நடந்து வந்து கொண்டிருக்கும் தமிழும் நமச்சியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தமிழ் இங்க ஒருத்தர நாம பார்க்க போறோம் என்று சொல்ல அதற்கு நமச்சி யாரு உனக்கு தெரிஞ்சவரா அப்போ அவரால நம்மளுக்கு உதவி கிடைக்குமா? இங்கிருந்து நம்ம தப்பி போய்டலாமா என்று கேள்வி கேட்டுகிட்டே வர இல்ல நான் பாக்க போறதே மேக்னாவை தான் என்று தமிழ் சொல்ல நமச்சி அதிர்ச்சி ஆகிறார்.

அதைத்தொடர்ந்து மேக்னா இருக்கும் ஹாஸ்பிடலுக்கு தமிழ் வர, உள்ளே வந்ததும் நமச்சி இது மேக்னா ஹாஸ்பிடல் போல இருக்கு இங்கே எல்லாரும் அவங்களுக்கு தெரிஞ்சவங்களா இருக்காங்க. நமக்கு ஏதாவது ஆகிட போகுது என்று பயந்தபடியே நமச்சி பேசி வருகிறார். அந்த நேரத்தில் பெட்டில் மேக்னா அமர்ந்திருக்க அங்கு வரும் தமிழை பார்த்ததும் கோபப்பட்டு திட்டுகிறார்.

உன்னை யாரு இங்கே விட்டா உன்னை மாமா கட்டி வச்சிருக்கேன்னு சொன்னாரு. நீ தப்பிச்சு வந்து என்ன ரிவன்ஜ் எடுக்க வந்திருக்கியா என்று கேட்க அதற்கு தமிழ் இல்ல என்னை மன்னிச்சிடுங்க. நீங்க என் நண்பனை அடிச்சீங்கன்னு நான் உங்களை அடிச்சேன். அது தப்பு பண்ணாம நீங்க அடிச்சீங்கன்னு தான் நான் அடிச்சேன்.

ஆனா உங்க புடவையில் தீ பட்டதால தான் நான் புடவைய கழட்டி எறிய வேண்டியது ஆயிடுச்சு. ஒரு பொண்ணோட உடையை நான் கழட்டிட்டேன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. அதனால தான் என்னை மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்டபடி இருக்க அதை கேட்டு மேக்னா யோசித்தபடி இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+