கதறி அழுத கார்த்திக்.. தமிழ் வீட்டுக்கு போக மறுத்த கோதை.. அர்ஜுனின் புது நாடகம்..தமிழ் எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் செப்டம்பர் ஆறாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் தமிழ் கூப்பிட, அதற்கு கிளம்புவதற்கு தயக்கத்தோடு கோதை அமர்ந்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இத்தனை பிரச்சனைக்கும் காரணம் நான் தான் என்று கார்த்திக் அழுது கொண்டிருக்க தமிழ் புது முடிவெடுக்கிறார். இந்த நிலையை என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
விஜய் எபிசோடின் ஆரம்பத்தில் கோதையின் குடும்பம் அனைவரும் கோயிலில் உட்கார்ந்து இருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு வரும் தமிழ் எதுக்கு இப்ப எல்லோரும் கோயிலில் இருக்கீங்க. நான் என்ன செத்தா போயிட்டேன்... எல்லோரும் வாங்க வீட்டுக்கு போகலாம். உங்க யாருக்கும் என்னோட நினைப்பு வரலையா? என்று தமிழ் கேள்வி கேட்க, அதற்கு கார்த்தி இல்லடா நாங்க ஹோட்டலில் தங்குகிறோம் என்று சொல்ல தமிழ் இதெல்லாம் வேணாம் வா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகிறார்.

அதைத் தொடர்ந்து எல்லோரும் எழுந்து தமிழுடன் போக கோதை மட்டும் அந்த இடத்திலேயே அமர்ந்து இருக்கிறார். அப்போது நடேசன் சென்று, வா கோதை நாமளும் போகலாம் என்று கூப்பிட, என்னை மாதிரி மோசமான அம்மாவா யாரும் இருக்கக் கூடாது. என் பையனுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை நான் பண்ணியிருக்கிறேன் என்று அழ, நடேசன் சமாதானப்படுத்தி இனி மேலாவது நம்ம பையன் சொல்றது கேட்போம் வா என்று கோதையை தமிழ் வீட்டுக்கு கூட்டிட்டு போகிறார்.
மறுபக்கம் தமிழ் அர்ஜுனை அடித்ததால் அர்ஜுனின் அம்மா அவருக்கு கையில் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அர்ஜுனன் மாமா வந்து கோதை தமிழ் வீட்டில் தங்கி இருக்கும் விஷயத்தை சொல்ல, அப்போது அங்கு ராகினி வந்து விடுவதால் அர்ஜுன் நல்லவன் போல அத்தை அங்கையாவது பாதுகாப்பாக இருக்காங்களே அதுவே போதும் என்று நடிக்கிறார்.

பிறகு ராகினி அங்கிருந்து போனதும் அர்ஜுனனின் மொத்த குடும்பமும் கோதை குடும்பத்தின் நிலைமையை பார்த்து சிரிக்கின்றனர். பிறகு எல்லோரும் டிரஸ் வாங்கிட்டு வருவதாக கிளம்பி போக தமிழ் கோதையை பார்க்கிறார். கோதையும் தமிழை பார்க்க இருவரும் பேசாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
அதைத்தொடர்ந்து கார்த்திக் தன்னால் தான் இப்படி ஆயிடுச்சு இந்த நிலைமைக்கு காரணமே நான் தான் என்று அழுது கொண்டிருக்க, வசு சமாதானப்படுத்துகிறார். அப்போது வசுவின் குழந்தை அழ கோதை யோசித்தபடியே தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications