அர்ஜுன் நடத்தும் புது நாடகம்.. கோதை பற்றி பீல் பண்ணும் ராகினி.. தமிழ் குடும்பத்தோடு போடும் பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் செப்டம்பர் ஏழாம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது. அதில் கோதை வீட்டை விட்டு வெளியே போனதை நினைத்து ராகினி பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அர்ஜுன் புது நாடகம் போடுகிறார்.
அதே நேரத்தில் தமிழ் தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து முக்கிய முடிவு எடுக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அர்ஜுனன் குடும்பத்தினர் விதவிதமான சாப்பாடு செய்து வைத்து ராகினியை சாப்பிட கூப்பிடுகின்றனர். அப்போது எல்லோரும் வீட்டை விட்டு போயிட்டாங்க என்ற பீலிங்கில் ராகினி சாப்பிட வர மறுத்து விடுகிறார். அப்போது அர்ஜுன் வந்து ராகினியை சமாதனம் செய்கிறார்.
அதற்கு ராகினி நான் தப்பு பண்ணிட்டனோ என்று தோன்றுகிறது. அப்பா அம்மா இல்லாமல் நான் தனியா இருந்ததே இல்லை. இப்போ அவங்க இல்லாமல் இருக்க கஷ்டமா இருக்கு என்று சொல்கிறார். அதற்கு அர்ஜுன் நான் வீட்டை விட்டு போக சொல்லலையே. நம்ம கூட தானே இருக்க சொன்னோம். அவங்க தானே போயிட்டாங்க. உங்க அம்மா அப்பா திரும்ப வருவதற்கு சந்தர்ப்பம் இருக்கு.
ஆனா எங்க அக்காவும் அப்பாவும் திரும்ப வராத இடத்துக்கு போயிட்டாங்களே என்று சொல்ல, அப்போது அர்ஜுனின் அம்மாவும் தங்களுடைய சோக கதையை சொல்கிறார். அதோடு தமிழ் அவங்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் இருக்க மாட்டான். நீ வாமா வந்து சாப்பிடு என்று பேசி ராகினியை எல்லோரும் சாப்பிட அழைத்துப் போகின்றனர்.
அந்த நேரத்தில் வசு தமிழ் வீட்டில் காய்கறி கட் பண்ணி கொண்டு இருக்க, அதற்கு தமிழ் நீ ஏம்மா இதை பண்றா என்று கேட்கிறார். அதற்கு வசு,நான் வசதியான வீட்டில் இல்லன்னா என்ன மாமா என் குடும்பத்தோட இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க கவலைப்படாதீங்க மாமா என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து சாப்பாடு ரெடியானதும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட ரெடியாகின்றனர்.
அப்போது சாப்பிட தட்டு இல்லாததால் என்ன செய்ய என்று யோசித்து கொண்டு இருக்க, அந்த நேரத்தில் நமச்சி நிலா சோறு சாப்பிடலாமா? என்று கேட்கிறார். இதனால் கோதை எல்லாருக்கும் சாப்பாடு உருட்டி கொடுக்க, முதலில் தமிழ் தயங்கி போய் நிற்க, பிறகு தமிழும் வாங்கி சாப்பிடுகிறார். அப்போது கோதை கண்கலங்குகிறார். அதோடு கார்த்திக் தமிழுக்கு செய்த துரோகத்தை நினைத்து அழுது கொண்டு தமிழிடம் மன்னிப்பு கேட்க, அதற்கு தமிழ் நானும் அர்ஜுன் நல்லவன் என்று தானே முதலில் நினைத்தேன்.
அதற்குப் பிறகுதான் அவனோட சுயரூபம் தெரிய வந்துச்சு. யாரும் கவலைப்பட வேண்டாம். நடந்ததெல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு. இனி என்ன பண்ணலாம் என்று யோசிப்போம் என்று ஆறுதல் கூறுகின்றனர். அதைத்தொடர்ந்து ராகினி சோகமாக இருக்க, ராகினி மனசு மாறி மீண்டும் அவ குடும்பத்தை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவாளோ என்று அர்ஜுன் குடும்பம் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு ராகினிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று மொட்டை மாடியில் வைத்து பட்டாசு கொளுத்துகின்றனர். அதை தமிழ் வீட்டில் இருந்து எல்லோரும் பார்த்து, எப்படி கொண்டாடிக் கொண்டிருக்காங்க பாருங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்த ராகினி இதெல்லாம் இப்போ தேவையா என்று கேட்க, எல்லாருக்கும் தான் பிரச்சனை இருக்கு, அதுக்காக சின்ன சின்ன சந்தோஷங்களை கூட கொண்டாடாமல் இருந்தால் எப்படி என்று அர்ஜுன் சொல்லுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications