சந்தோஷத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் தீபக்.. நடிகர் அஜித்குமார் உடன் இப்படி ஒரு வாய்ப்பா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகனாக தமிழ் கேரக்டரில் நடிகர் தீபக் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் தீபக் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து அவரோடு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அத்தோடு அந்த புகைப்படங்களுக்கு நெகிழ்ச்சியான கேப்ஷனையும் தீபக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் தீபக்கிற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு முன்பே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியலில் ஒன்றான தென்றல் போன்ற சீரியல்களிலும் கூட கதாநாயகனாகவும் தீபக் நடித்திருந்தார். இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தான் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இவர் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அத்தோடு தீபக் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருந்தார். அந்த நேரத்தில் பெரிய அளவில் தீபக்கிற்கு பிரபலத்தை கொடுத்தது தென்றல் சீரியல் தான். இந்த சீரியல் கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஹிட் ஆக ஓடியது. அதை தொடர்ந்து இப்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலமாகவும் அதிகமான ரசிகர்களை தீபக் கவர்ந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் தீபக் கடந்த 2008 ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் தீபக் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து நடிகர் அஜித் குமாரை சந்தித்திருக்கிறார். அப்போது சில புகைப்படங்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அத்துடன் இந்த புகைப்படத்திற்கு "இது தல தர்ஷன்" இது ஒரு முறை நீல நிலவு.. தன்னை சுற்றி வியக்க வைக்கும் ஒளியுடன் கூடிய மிகவும் அடக்கமான நபர்.. உண்மையான ஜென்டில்மேன் நடிகர் அஜித்குமார் என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார். இதற்கு அதிகமான சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது இவர் பல போராட்டங்களுக்குப் பிறகு அடுத்தடுத்து வெற்றியடைந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் வில்லன் அர்ஜுன் இவரை அவமானப்படுத்த முயற்சி செய்யும் போதெல்லாம் அவரே அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நிஜ வாழ்க்கையிலும் இதுபோல வெற்றி அடைய வேண்டும் என்று பலர் இந்த புகைப்படங்களுக்கு கருத்து கூறி வருகிறார்கள்.

அத்தோடு பல ரசிகர்கள் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்தடுத்து எல்லா உண்மைகளும் உடைபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதா? நீங்கள் நடிகர் அஜித்தோடு புகைப்படம் வெளியிட்டிருப்பதால் ஏதேனும் திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறீர்களா? என்று பலர் விசாரித்து வருகின்றனர்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications