தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் யார் தெரியுமா? அதுவும் “இந்த” நடிகரின் தம்பியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சமீபத்தில் விறுவிறுப்பான கதை அம்சத்தோடு இருக்கும் நிலையில் இந்த சீரியலில் அர்ஜுன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழுக்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை கொடுத்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் யார் என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய உண்மையான பெயர் ரயான் தானாம். மேலும் அவரைப் பற்றிய பல விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 tamilum saraswathiyum Serial Arjun character Actor Ryan Biography

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இருந்து பிளான் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருந்த அர்ஜுன் எதிர்பார்த்தபடியே இப்போது தமிழுடைய குடும்பத்தினர் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கத்தில் மேக்னாவை கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியை சரஸ்வதி மீது போட்டு அர்ஜுன் சரஸ்வதியை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்.

 tamilum saraswathiyum Serial Arjun character Actor Ryan Biography

இப்போது கம்பெனியிலும் பிரச்சனைகள் வந்திருக்கும் நிலையில் அதில் சரியாக முடிவெடுக்க தெரியாமல் கார்த்திக் கம்பெனி விஷயத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். கோதை குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க கூடாது என்று அர்ஜுன் செய்யும் வேலைகளை பார்த்து ரசிகர்கள் அவரை திட்டியது வந்தாலும் அவர் சீரியலில் வருவது போன்று நிஜ கேரக்டரில் கொஞ்சம் கூட கிடையாதாம்.

 tamilum saraswathiyum Serial Arjun character Actor Ryan Biography

சீரியலில் எப்போதும் வில்லனாக அதுவும் சிரித்தபடியே வில்லத்தனம் செய்யும் இவர் நிஜத்தில் ரொம்பவே அமைதியான கேரக்டர்தான். அதுபோல அர்ஜுனுடைய நிஜ பெயர் ரயான். இவர் சென்னையை சேர்ந்தவர்தான். அதுபோல சென்னையில் உள்ள வேலம்மாள் தான் இவர் ஸ்கூல் படிப்பை படித்து முடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு சின்ன வயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது.

அதுபோல போட்டோ சூட்டிலும் இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் கல்லூரி படிப்பு முடித்ததும் மாடலிங் பக்கம் திரும்பி இருக்கிறார். அப்போது தான் MR.Teen India runerup ஆகவும் இவர் தேர்வாகி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கராத்தையுளும் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் படிப்பு கேரியர் என்று இவருடைய வாழ்க்கை சுமூகமாக போய்க் கொண்டிருந்தபோது இவருக்கு நடிக்க வேண்டும் என்று அதிக ஆசை ஏற்பட்டிருக்கிறது.

அதுபோல ரயான்க்கு அம்மா தான் அவருக்கு ரொம்பவே க்ளோசாம். அடிக்கடி அம்மாவோடு வெளியே சென்று வருவது ரயானின் வாடிக்கையாக இருக்கிறதாம்‌. இந்த நிலையில் ரயானுக்கு ரோஜா சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் அர்ஜுன் தாஸ் மாதிரி இருக்கீங்க அதனால நீங்க அவரோட தம்பியா என்று பலர் கேள்வி எழுப்ப அதை சிரித்தபடியே அந்த மீம்ஸ்களை கூட தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த ரயான் நான் அர்ஜுன் தாஸ் மாதிரி இருக்கேன்னு சிலர் சொல்றாங்க.

நான் அவருடைய தம்பி எல்லாம் கிடையாது. நான் அவருடைய ரசிகர் அவ்வளவுதான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல பேட்டிகளில் கூட தமிழும் சரஸ்வதியும் சீரியல் பார்த்துக் கொண்டு என்னை பலர் திட்டுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலர் ரோட்டில் போகும்போது கூட என்னை பார்த்து முறைத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் நிஜத்தில் நான் அப்படியெல்லாம் கிடையவே கிடையாது என்று ராயன் கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+