மேக்னாவிடம் எல்லை மீறும் தமிழ்.. சரஸ்வதி கேட்ட கேள்வி.. குடும்பத்திற்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் டிசம்பர் 14ஆம் தேதி எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் அர்ஜுனின் ஆட்கள் தமிழில் பொருள்கள் ஏற்றி வந்த லாரியை கடத்திக் கொண்டு போயிருந்த நிலையில் அதை கொண்டு வந்த மேக்னா தமிழை பிரச்சினையிலிருந்து காப்பாற்றுகிறார்.
அதே நேரத்தில் சரஸ்வதி வீட்டில் அர்ஜுனால் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டில் கோதை, நடேசன், வசு, சரஸ்வதி என நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நாம் செய்த தவறுதான் தமிழ் இவ்வளவு கஷ்டப்படுறான் என்று கோதை பேசிக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் அர்ஜுன் இவ்வளவு டார்ச்சர் கொடுப்பான் என்று நினைத்து கூட பார்க்கல என்று வசுவும் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு கோதை அர்ஜுன் நம்ம வீட்டில் உள்ளவர்கள் யாரும் நிம்மதியா இருக்க கூடாதுன்னு நினைக்கிறான் என்று கோதை பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு தமிழும் நமச்சியும் வருகின்றனர். அவர்கள் கம்பெனி முதலாளி தரகுறைவாக பேசியதை கூறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஆர்டர் கேன்சல் செய்து விட்டார்கள்.
வேறு கம்பெனியில் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் மெட்டீரியல் வேற ஒரு கம்பெனிக்கு விற்று விட்டீர்கள் என்று எல்லாம் கேவலமாக பேசி விட்டார்கள் என்று நமச்சி கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோதை தமிழ் எப்போதும் நியாயமாக நடந்து கொள்வான் எவ்வளவு ஹெல்ப் பண்ணிருக்கிறான் யூனியன் ஆபீசுக்கு, ஆனா அவங்க அதெல்லாம் மறந்துட்டாங்களே என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதுபோல் இரவு சரஸ்வதியிடம் தமிழ் பேசிக் கொண்டிருக்கும் போது வாழ்க்கை வெறுத்து போனது போல இருக்கு. இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது. எல்லாத்தையும் தூக்கி ஓரங்கட்டி வச்சிட வேண்டியதுதான் என்று பேசிக்கொண்டிருக்கிறார். அதற்கு சரஸ்வதி தமிழுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு இருக்கிறார். அடுத்த கட்டத்தில் கோவிலுக்கு சென்று தமிழுக்காக சரஸ்வதி வேண்டி கொண்டிருக்கிறார்.
அதேபோல் தமிழ், டெலிவரி செய்ய வேண்டிய கம்பெனிக்கு சென்று அவரிடம் டைம் கேட்கிறார். ஆனால் அந்த கம்பெனி முதலாளி அதெல்லாம் முடியாது. உங்களுடைய ஆர்டரை நான் கேன்சல் செய்கிறேன் என்று திட்டவட்டமாக பேசி விடுகிறார். அப்போது அந்த சமயத்தில் அங்கு வேலை செய்பவர்கள் ஓடி வந்து சார் நமக்கு டெலிவரி செய்ய வேண்டிய லாரி வந்துவிட்டது என்று கூறுகின்றனர்.

அதைக் கேட்டு அந்த முதலாளி தமிழிடம் நீங்க அந்த லாரியை கண்டுபிடிச்சிட்டீங்களா? என்று கேட்க அதற்கு தமிழ் இது எப்படி நடந்துச்சு எனக்கே தெரியலையே வாங்க போய் பார்க்கலாம் என்று எல்லோரும் ஓடி வெளியே வருகின்றனர். அப்போது மேக்னா லாரி எடுத்துட்டு வந்து நிறுத்தி அதில் இருந்து இறங்கி இது தானா அந்த லாரி என்று கேட்டதை பார்த்து தமிழ் பிரமித்து போய் நிற்கிறார்.
அது மட்டும் இல்லாமல் அந்த கம்பெனியின் முதலாளியிடம் மேக்னா பேச அதற்கு அந்த ஓனர் மன்னிப்பு கேட்கிறார். பிறகு தமிழ் மேக்னாவை கட்டிப்பிடித்து நன்றி கூறுகிறார். அதை பார்த்து நமச்சி அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications