தமிழுக்கு அதிர்ச்சி கொடுத்த ராகினி.. மேக்னா செய்த அதிரடி.. உடைந்து போன குடும்பம்.. இப்படி ஒரு முடிவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் டிசம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் அர்ஜுன் பற்றிய உண்மைகள் ராகினிக்கு தெரிய வர ராகினி தமிழ் வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார்.

அதே நேரத்தில் தமிழை அவமானப்படுத்தியவர்களிடம் மேக்னா தமிழைப்பற்றி புரிய வைத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

tamilum saraswathiyum serial December 18th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அர்ஜுனும் அவருடைய மாமாவும் ஜெயிலில் இருக்கின்றனர். அப்போது அதை தெரிந்து கொண்ட ராகினி குடும்பத்தோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அப்போது ராகினி என்ன ஆச்சு என்று அர்ஜுனிடம் விசாரிக்க அதற்கு அர்ஜுன் எல்லாம் உங்க அண்ணனால்தான் இப்படி ஆகிவிட்டது.

உங்க அண்ணன் தான் இதற்கு காரணம் என்று சொல்கிறார். உடனே போலீஸ் வந்தவுடன் எதற்காக என் புருசனை இப்படி அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க? அவர் எந்த தப்பும் பண்ணலையே? இது குடும்ப பிரச்சனையால் இப்படி நடந்து விட்டது என்று ராகினி சொல்ல, அதற்கு உன் புருஷனே செஞ்ச தப்பை ஒப்புக்கொண்டார் என்று போலீஸ் சொல்கின்றனர். அதற்கு ராகினி நீங்க அந்த வண்டியை கடத்தினீங்களா என்று அர்ஜுனிடம் கேட்க, ஆமாம் என்று அர்ஜுன் சொல்கிறார்.

கூடவே எனக்கு வேறு வழி தெரியவில்லை. எப்படியாவது நம்முடைய ஆர்டர் நம்மளை விட்டுப் போக கூடாதுன்னு நினைச்சு தான் நான் அந்த வண்டியை கடத்தினேன்.. ஆனால் அது மிகப்பெரிய அடியா வந்துவிட்டது என்று கூறுகிறார். அதைத்தொடர்ந்து தமிழ் குடும்பத்தினர் அனைவரையும் யூனியன் ஆபீஸ்க்கு மேக்னா வர சொல்லி இருக்கிறார். அப்போது யூனியன் ஆபீஸ்க்கு அனைவரும் வந்து இருக்கின்றனர்.

அந்த சமயத்தில் ஏற்கனவே தமிழை அவமானப்படுத்திய இரண்டு நபர்களுக்கு தமிழைப் பற்றி புரிய வைப்பதற்கு பேசுகிறார். அதோடு தமிழ் எந்த தவறும் செய்யவில்லை. அந்த அர்ஜுன்தான் லாரியை கடத்தி இருக்கிறார். அந்த மெட்டீரியலையும் நாங்கள் சேர்க்க வேண்டிய இடத்தில் கரெக்டா சேர்த்துவிட்டோம் இப்போது தமிழ் பேச்சுக்கு கட்டுப்படுறீங்களா என்று அந்த நபரிடம் மேக்னா கேட்க அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள்.

இதை பார்த்து தமிழ் குடும்பத்தினர் சந்தோஷத்தில் இருக்கிறதனர். ஆனால் மேக்னா எல்லாவற்றையும் செய்து விட்டு கிளம்புகிறார். அப்போது சரஸ்வதி வந்து மேக்னாவிடம் செய்த உதவிக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ் சோகமாக இருக்கிறார். அதற்கு ஏன் என்று எல்லோரும் கேட்க அதற்கு தமிழ் கம்பெனியை மூடிட்டாங்க அந்த அர்ஜுன் பண்ண தப்பால என்று ஃபீல் பண்ணி பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்து அனைவரும் அர்ஜுன் பண்ணியதால் கம்பெனி இப்படி மூடிவிட்டார்கள் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் இன்னும் ஒரு வருடத்திற்கு அர்ஜுன் வெளியே வர முடியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராகினி வீட்டிற்குள் வருகிறார். எல்லாம் பிளான் போட்டு நீங்க என் புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்கன்னு சந்தோஷத்துல இருக்கீங்களா? இதை நான் சும்மா விடமாட்டேன்.

tamilum saraswathiyum serial December 18th promo and episode full update

இனிமே உங்களுக்கு எதிரி நான் தான் அந்த கம்பெனியை நானே எடுத்து நடத்துவேன் என்று சபதம் போடுகிறார். அந்த சமயத்தில் கார்த்தி உனக்கு பிசினஸ் பற்றி என்ன தெரியும் என்று எதார்த்தமாக கேட்க அதை தவறாக புரிந்து கொண்டு மேலும் ராகினி கோபம் வருகிறார். அதோடு தமிழைப் பார்த்து எனக்கு எதிரி இனிமே நீ மட்டும் தான் என்று மிரட்டி விட்டு போகிறார். இதனால் தமிழ் உடைந்து போய் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+