இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. சீரியல் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? மக்கள் என்ன முட்டாளா?
சென்னை: விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ட்விஸ்ட் வேண்டும் என்பதற்காக மேக்னா என்ற கேரக்டரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே தமிழுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் ஆகி இருக்கும் நிலையில் இது தெரியாமல் மேக்னா இப்போது தமிழை காதலித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் தமிழ் வீட்டில் இருப்பவர்கள் மேக்னாவை தமிழ் உடைய வாழ்க்கையில் வந்த தேவதை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோடில் சில சொதப்பல்களும் நடந்தது அது பற்றி பார்க்கலாம்.

சீரியல் டிஆர்பி வரவேண்டும் என்பதற்காக கதை அடிக்கடி மாற்றப்பட்டு வருவது இயல்புதான். ஆனால் அது கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி இருந்தால்தான் சிறப்பாக இருக்கும். கம்பி கட்டுற கதைகளை எல்லாம் சீரியல்களில் சிலர் லாஜிக்கே இல்லாமல் எடுத்து வைப்பதால் இதுபோன்ற பலருடைய வாழ்க்கையும் இப்போது மாறிக்கொண்டிருப்பது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.
சீரியல்களுக்கு அடிமையாக பெண்கள் மட்டும் அல்லாமல் இப்போது பல ஆண்களும் சீரியல் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். சரி அதை விடுவோம் இப்போ கதைக்கு வருவோம். தமிழும் சரஸ்வதியும் என்று ஒரு சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் அடுத்தடுத்த திருப்பங்களோடு வேகமாக பயணித்து வந்தது ஆனால் திடீரென்று என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இந்த சீரியலின் குழுவினர்கள் கதையை மொத்தமாக மாற்றி வைத்து விட்டார்கள்.

ஏற்கனவே தமிழுக்கும் அர்ஜுனுக்கும் வாய்க்கா தகராறு போல ஒரே சொத்து தகராறு வந்து கொண்டே இருக்க இது மக்களுக்கு போரடித்து விட்டது என்பதற்காக புது ட்விஸ்ட் என்கிற பெயரில் மேக்னா என்ற கேரக்டரை உள்ளே இறக்கி இருந்தனர். அதிலும் மேக்னா பல பிசினஸை தனி ஆளாக செய்து வரும் தைரியமான பெண்ணாக இருக்கிறார். ஆரம்பத்தில் திமிராக காட்டிய மேக்னா கேரக்டர் பிறகு தமிழில் கேரக்டரை பார்த்து புரிந்து கொண்டு அவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார்.
ஆனால் தமிழுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று நினைத்து தான் மேக்னா காதலித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலில் கதை ரூட் மாறியதும் ரசிகர்கள் ஐயோ இந்த சீரியலிலும் இரண்டு பொண்டாட்டி கதையை வைத்து விடாதீர்கள் என்று கதறியதை பார்க்க முடிந்தது. ஆனாலும் சீரியல் தரப்பினர்கள் இந்த கதறலை கண்டு கொள்ளாமல் காயை நகர்த்தி வருகிறார்கள்.
இப்போது தமிழ் மனைவி சரஸ்வதி கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் தமிழும் சரஸ்வதியும் ஒன்றாக இருந்தாலும் சரஸ்வதி தான் தமிழ் உடைய மனைவி என்பதை நமச்சி ஒவ்வொரு இடத்திலும் மறைத்து கொண்டு இருக்க தன்னுடைய நண்பனின் வாழ்க்கையை நல்லது செய்கிறேன் என்கிற பெயரில் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் நமச்சி ஒவ்வொரு நாளும் உண்மையை மறைப்பதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இதிலும் சுவாரசியம் என்னவென்றால் 30 கம்பெனிக்கு மேல ஒரே ஆளாக நிர்வகித்து வரும் மேக்னா தமிழுக்கு திருமணமானதை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது தான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது. மேக்னா ரெஜிஸ்ட்ரேஷனில் வைத்து தமிழ் உடைய ஆதார் கார்டில் அவருடைய பிறந்தநாளை பார்த்து வைத்திருந்தார். ஆனால் தமிழுடைய கம்பெனி சரஸ்வதி பெயரில் இருப்பதை இத்தனை நாட்களாக ஆகியும் அறிவாளியான மேக்னாவால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று காட்டுவது தான் பெரிய மைனஸ் ஆக இருக்கிறது.
ஏற்கனவே அர்ஜுன் தமிழுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்ல அதை நம்பவிடாமல் நமச்சி தடுத்து விட்டார். சரி, அது போகட்டும் ஆனால் சரஸ்வதி எப்போதுமே தமிழ் வீட்டில் இருக்கிறார். அதை வைத்தும் சரஸ்வதி தமிழுடைய மனைவி என்பதை யூகிக்க முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுபோல நேற்று தமிழ் உடைய பிறந்தநாள் பங்க்ஷன் மேக்னாவால் கிராண்ட் ஆக கொண்டாடப்பட்டது.
அப்போது தன்னுடைய மனைவிக்கு கேக் ஊட்டாமல் தனக்காக கிராண்டாக செலிப்ரேஷன் செய்ததற்காக மேக்னாவிற்கு தமிழ் கேக் ஊட்டி இருந்தார். இது பார்க்கும் ரசிகர்களை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்கத் தோணுது.... தன் மனைவி மீது உயிரையே வைத்திருக்கும் தமிழ் தன்னுடைய சந்தோஷத்தில் முக்கியமான இடத்தில் தன்னுடைய அப்பா அம்மா இதற்கு அடுத்தபடியாக மேக்னாவை வைத்து பார்க்கிறார்.
இதைப் பார்த்து தியாக சுடராக சரஸ்வதி பீல் மட்டும் பண்ணிக் கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்களுக்கு கடுப்பாகத்தான் முடிந்தது. அதுபோல தமிழுக்காக மேக்னா காரை பரிசளித்ததும் தமிழின் அம்மா கோதை மேக்னா தமிழ் உடைய வாழ்க்கையில் வந்த தேவதை என்று புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய மகனுக்கு இன்னொரு பெண்ணு எந்த அர்த்தத்தில் இத்தனையும் செய்கிறது என்பது புரியாத அம்மா கோதை தான் ஒரு காலகட்டத்தில் பிசினஸில் கொடி கட்டி பறந்த பெண் என்பதும் பலரும் ஞாபகம் வச்சுக்கோங்க.... இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த முக்கோண காதல் கதையை கொண்டு போய் பிறகு டிஆர்பி எகிற வைப்பதற்கு ரகசியத்தை உடைக்க போகிறார்களோ தெரியவில்லை....












Click it and Unblock the Notifications