சரஸ்வதியை காப்பாற்ற கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழ்.. மேக்னா பற்றி அதிர்ச்சி கொடுத்த ராகினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 12ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சரஸ்வதியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அடுத்த முயற்சியை எடுக்கிறார். அதே நேரத்தில் மேக்னாவை பற்றி கேள்வி கேட்டு அர்ஜுனுக்கு ராகினி அர்ஜுன் அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் ஜெயிலிலிருந்து வந்ததும் அர்ஜுனுக்கும் பரமுவிற்கும் அர்ஜுனனின் அம்மாவும் அக்காவும் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது போய் அடி வாங்கிட்டு வந்திருக்கீங்களே என்று பரமுவின் மனைவி திட்டிக் கொண்டு ஒத்தடம் கொடுக்கிறார். அப்போது அர்ஜுனின் அம்மா நான் உன் அண்ணன் கிட்ட அடி வாங்க தான் என் பிள்ளையை பெத்து போட்டு இருக்கேனா என்று ராகினியை திட்டுகிறார்.

உடனே ராகினி எதற்காக அண்ணன் இப்படி நடந்து கொண்டார்னு எனக்கு தெரியல. ஆனா அண்ணன் இப்படி நடந்துக்கிற ஆளே கிடையாது. எதற்காக அர்ஜுனை அடிச்சாரு எந்த உண்மையை வாழ நினைச்சாருன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. உண்மைய சொல்லுங்க அர்ஜுன் மேக்னா கொலைக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இப்பவாவது உண்மையை சொல்லுங்க என்று கேட்க அதற்கு அர்ஜுன் நீ என்னையே சந்தேகப்படுறியா என்று கேள்வி கேட்க,
அதற்கு ராகினி நான் சந்தேகப்படவில்லை எதற்காக அண்ணே உங்களை அடிச்சாரு இப்படி அடிக்கிற ஆளே கிடையாது. இதுல ஏதோ இருக்கு என்று ராகினி பேசுகிறார். அதற்கு பரமு கொலை செஞ்சது சரஸ்வதி தானே அந்த பழியை தூக்கி எங்க மேல போட பாக்குறாரு உங்க அண்ணன் என்று சொல்ல அதற்கு வேலைக்காரப் பெண்ணான அபி கொலை செஞ்சவன் விளங்காம போகணும், கை, கால் முடங்கி போவான் என்று சாபம் விட அத கேட்டு கதறி போன பரமு எதுக்காக இப்படி சாபம் விடுற!
கொலை செய்தது சரஸ்வதி தானே என்று கேட்க அதற்கு ராகினி அண்ணி அப்படி செய்கிற ஆளையே கிடையாது. இதுல எதோ இருக்கு கண்டிப்பா அது ஒரு நாள் வெளியே வரும் என்று பேசுகிறார். அடுத்த கட்டத்தில் ராகினி அர்ஜுன் மீது சந்தேகப்பட அர்ஜுன் வழக்கம் போல நடித்துவிட்டு வெளியே போகிறார். அதை தொடர்ந்து கோதைக்கு போன் பண்ணி ராகினி தமிழ் அண்ணா எதற்காக அர்ஜுனனை கடத்தி அடிக்கணும் என்று கேள்வி கேட்கிறார்.

அதைக் கேட்டு கோதை அதிர்ச்சி அடைகிறார். பிறகு தமிழும் நமச்சியும் வீட்டிற்கு வந்ததும் எதற்காக அர்ஜுன அடிச்சீங்க என்று கேட்க அதற்கு தமிழ் அடிச்சதால தான் பரமு கொலையை நாங்க செய்யல ஆனா இதுக்கு இன்னொருத்தங்களோட சம்பந்தம் இருக்குன்னு சொல்ல வந்தான் ஆனா அதுக்குள்ள ராகினி வந்து தடுத்துட்டா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதோடு ஜெயிலில் சரஸ்வதியை கொடுமைப்படுத்த சொல்லி அர்ஜுன்தான் பணம் கொடுத்து இருக்கிறான் என்று உண்மையை சொல்ல அதற்கு கோதை கட்டையில போறவன் இதுக்கு மேலும் திருந்த மாட்டான் என்று திட்டி விடுகிறார். அப்போது கார்த்திக் கம்பெனி விஷயமாக பேச வர அதற்கு தமிழ் கோவப்பட்டு நீயே எல்லாத்தையும் பாத்துக்கோ என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்த காட்சியில் தமிழ் போலீசை பார்க்கப் போகிறார். அப்போது அர்ஜுனுக்கும் அவனுடைய மாமாவுக்கும் இந்த கொலையில் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல. இதுல வேற ஏதோ நடந்திருக்கு கண்டிப்பா கலிவரதனை விசாரிச்சா தான் தெரியும் என்று சொல்ல அதற்கு போலீசும் ஆமா கொலை நடந்த அடுத்த நாளே அவங்க ரெண்டு பேரும் பெங்களூர் போயிட்டாங்க.
அப்புறம் பாடி வாங்க தான் வந்து இருக்காங்க என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து கார்த்தி கம்பெனியில் முட்டாள் தனமான ஒரு முடிவை எடுக்க அதற்கு தொழிலாளிகள் இது வேண்டாம் என்று சொல்ல அதற்கு கார்த்தி எது நடந்தாலும் நான் பாத்துக்குறேன் நீங்க நான் சொல்றதை மட்டும் செய்யுங்க என்று கத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications