சரஸ்வதியை காப்பாற்ற கடைசியில் மேக்னா சொன்னதை பாருங்க! அடுத்த பிரச்சனை தொடக்கம்.. பாவம் தமிழ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 19ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சரஸ்வதி மீது தப்பில்லை என்பதை நிருபிப்பதற்காக தமிழ் பல முயற்சிகளை எடுக்க, கடைசி நேரத்தில் மேக்னாவின் செல்போனில் இருந்த வீடியோ மூலமாக சரஸ்வதி மேக்னாவின் கொலையிலிருந்து விடுதலை ஆகிறார்.
சரஸ்வதிக்கு எதிராக எல்லா சதிகளையும் செய்து வந்த கலியமூர்த்தி மற்றும் அவருடைய மகன் ஜெயிலில் அடைபட்டு இருக்கும் நிலையில் அர்ஜுனால் தமிழுக்கு அடுத்த பிரச்சனை வர இருக்கிறது. இதில் இன்று என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் சரஸ்வதியை விடுவிப்பதற்காக கண் தெரியாத நபர் தன்னுடைய டேப் ரிக்கார்டில் பதிந்து வைத்த ஆடியோவை ஜட்ஜ் முன்பு போட்டு காட்ட, அந்த ஆதாரம் பொய் அதை எல்லாம் டெக்னாலஜில வாய்ஸ் மாத்தி பேசலாம் என்று அந்த ஆதாரத்தை பற்றி எதிர் தரப்பு வக்கீல் கடுமையாக விமர்சிக்கிறார். அதற்கு நீதிபதி அந்த ஆதாரம் உண்மையா இல்லையா என்பதை உறுதி செய்யுமாறு கட்டளை இடுகிறார்.
அதோடு மீண்டும் இந்த கேஸ் மதியத்துக்கு மேல் நடைபெறும் என்று சொல்லிவிடுகிறார். அதைத் தொடர்ந்து வெளியே வந்த சரஸ்வதிக்கு கோதை ஜூஸ் கொடுக்கிறார். அதை முதலில் குடிக்க விடாமல் அங்கு இருந்த கான்ஸ்டபிள் தடுக்கிறார். பிறகு இன்ஸ்பெக்டர் வந்து சொன்னதும் சரி என்று கான்ஸ்டபிள் சொல்கிறார். ஆனால் சரஸ்வதி தனக்கு ஜூஸ் வேண்டாம் நான் விடுதலையாகாமல் எதுவும் குடிக்க மாட்டேன் என்று மறுத்து விடுகிறார்.
அதற்கு தமிழ் அவரை சமாதானப்படுத்தி ஜூசை குடிக்க வைக்கிறார். அந்த நேரத்தில் கலிவரதனும் அவருடைய மகனும் நாங்கள் இங்கே இருந்தால் பிரச்சனை ஆகிவிடும். அதனால் வெளியே போய்விடுகிறோம் என்று அங்கிருந்து தப்பிக்கப்படுகின்றனர். அதற்கு அர்ஜுன் நீங்கள் இப்போது இங்கே இருந்து போனால் தான் பெரிய பிரச்சினையாகும். இப்போதான் உங்களுடைய பெயரை அந்த கண் தெரியாதவன் இழுத்து விட்டு இருக்கிறான்.
அதனால் நீங்கள் இந்த நேரத்தில் போனீங்கன்னா நீங்கதான் தப்பு செஞ்சவங்கன்னு தெரிந்து விடும் என்று அர்ஜுன் மிரட்டி பிடித்து வைக்கிறார். பிறகு கோர்ட் தொடர்ந்து நடக்கிறது. அப்போது அந்த ஆடியோ ஆதாரத்தை சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது என்று எதிர் தரப்பு வக்கீல் ஏற்கனவே நடந்த பல கேஸ்களை பற்றி எடுத்துக்காட்டோடு சுட்டிக்காட்ட அதற்கு நீதிபதியும் அந்த ஆடியோ ஆதாரத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி விடுகிறார்.
அப்போது தமிழ் இன்னும் ஒரு ஆதாரம் இருக்கு என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது அந்த கண் தெரியாத ஐயாவின் பையில் இருந்து மேக்னாவின் போனை எடுக்க அதற்கு எதிர்தரப்பு வக்கீல் நீங்க இந்த போனை திருடி வச்சிருக்கீங்களா? என்று கேட்கிறார். அதற்கு கண் தெரியாதவர் இது போன்ற என்று எனக்கு தெரியாது. ஏதோ டேப்ரிக்கார்ட் என்று நினைத்து நான் எடுத்து வைத்திருந்தேன்.
பிறகு தமிழ் வந்து என்னிடம் நீங்க ஏதாவது அந்த இடத்தில் இருந்து எடுத்தீங்களானு கேட்கும் போது இதை காட்டினேன். அப்போ அதில் இருந்த வீடியோவை அவர் பார்த்தார் என்று சொல்ல, தமிழ் மேக்னா தன்னை யார் கொல்லவராங்க என்பது பற்றி ஒரு வீடியோவில் பேசி இருக்காங்க. அதை நீங்க பார்த்தாகணும் என்று நீதிபதியிடம் மேக்னாவின் செல்போனை கொடுக்க,
அதில் மேக்னா தன்னை கொலை செய்ய வருவது தன்னுடைய மாமா கலிவரதனும் அவருடைய மகனும் தான் என்று சொல்லி, சொத்துக்காக ஆசைப்பட்டு அவர்கள் இருவரும் என்ன துரத்திக் கொண்டு வராங்க நான் உயிரோடு இருப்பனா? இல்லையா? என்று தெரியாது. ஆனால் சரஸ்வதியும் தமிழிலும் ரொம்ப நல்லவங்க. எல்லாத்துக்கும் காரணம் எங்க மாமா தான். நான் தமிழ் என்னை காதலிக்கிறதா நினைச்சு தப்பா புரிஞ்சுகிட்டேன்.

ஆனால் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்திருக்கிறார். நான் உங்களை ரொம்பவே மிஸ் பண்றேன் என்று அந்த வீடியோவில் மேக்னா பேசியிருக்கிறார். அந்த ஆதாரத்தை ஜட்ஜ் பார்த்ததும் கலிவரதன் மற்றும் அவருடைய மகனிடம் உண்மையை ஒத்துக் கொள்ளுமாறு சொல்ல அவர்கள் இருவரும் ஆமா நாங்க தான் மேக்னாவை கொலை செய்தது என்று ஒத்துக் கொள்கின்றனர்.
இதனால் சரஸ்வதிக்கு விடுதலை கிடைக்கிறது. அதோடு சரஸ்வதி ஜெயிலில் கொடுமைப்படுத்தப்பட்டதற்கும் அந்த வார்டனுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்றும் கூறுகிறார். அதுபோல இந்த கேசில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் ஆபீசர்களையும் நீதிபதி பாராட்டுகிறார். அதை தொடர்ந்து ஜெயிலிலிருந்து வெளியே வந்த சரஸ்வதி தமிழை கட்டிப்பிடித்து சந்தோஷத்தில் அழுகிறார்.
இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஆனால் இதைத் தொடர்ந்து கம்பெனியில் கார்த்தியால் புது பிரச்சனை வந்திருக்கும் நிலையில் இனி கம்பெனியில் அர்ஜுனோடு தமிழ் வழக்கம் போல மோதுவது போன்று தான் காட்சி இருக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications