அர்ஜுன் நிலமை இனி அவ்வளவுதானா? ரசிகர்கள் நினைத்தது நடந்தாச்சு.. வெடித்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழிலும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மேகனா கதை முடிவுக்கு வந்ததும் வழக்கம் போல கம்பெனியில் அர்ஜுன் மற்றும் தமிழுக்கு இடையே பிரச்சனை வெடிக்கிறது.
அதிலும் தன்னுடைய தம்பியால் கம்பெனியில் பிரச்சனை வந்துவிட்டது என்று அனைவரும் முன்னிலையிலும் கார்த்திக்கை தமிழ் அவமானப்படுத்தி இருக்கிறார் அதோடு தான் செய்தது நியாயம் என்று வீட்டிலும் தமிழ் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் குடும்பத்திற்குள் பூகம்பம் வெடிக்க இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சரஸ்வதி எக்ஸாமுக்கு போவதற்காக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது தமிழ் நீதான் நல்லா படிச்சிட்டியே எதற்காக பயப்படுற என்று கேட்க அதற்கு சரஸ்வதி எக்ஸாம்னாலே என்னன்னு தெரியல எனக்கு பயம் வந்துருது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது தமிழுக்கு ஒரு போன் வருகிறது ஏற்கனவே ஆர்டர் கொடுத்து கேன்சல் செய்த கம்பெனியிலிருந்து போன் வருகிறது.
உடனே தமிழும் கார்த்திக்கும் அங்கு கிளம்பி போகின்றனர். அந்த கம்பெனிக்கு போகும்போது அது மட்டும் அல்லாமல் நீங்கள் கோபமாக இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும் ஆனால் அந்த நேரத்தில் எங்களுடைய சுச்சுவேஷன் அப்படி அமைந்துவிட்டது. அதனால் எங்களை மன்னித்து விடுங்கள் என்று கூறுகிறார்கள். அதற்கு தமிழ் நீங்கள் மன்னிப்பு கேட்டதே பெரிய விஷயம் பரவால்ல விடுங்க நாங்க கிளம்புறோம் என்று கிளம்புகிறார்.
அப்போது அந்த கம்பெனியில் உள்ளவர்கள் உங்களை எதுக்காக வர சொன்னோம்னு சொல்லலையே என்று சொல்ல அந்த நேரத்தில் அர்ஜுன் கத்திக் கொண்டே உள்ளே வருகிறார். வந்ததும் கம்பெனியில் இருந்தவர்களிடம் எனக்கு கொடுத்த ஆர்டர் தான் நான் முடித்துக் கொடுத்துவிட்டேனே எதுக்காக நீங்க இன்னும் மெட்டீரியல் அனுப்ப வில்லை என்று கோபமாக கேட்க அதற்கு அந்த கம்பெனியில் உள்ளவர்கள் உங்களுக்கு அனுப்பனும்னு அவசியம் கிடையாது.
நீங்க ஒழுங்காவே குவாலிட்டியா அனுப்பல அதனால உங்களுடைய ஆர்டரை கேன்சல் செய்கிறோம் என்று சொல்கின்றனர். இதனால் கோபமாக அர்ஜுன் கடுப்பாகி கட்டுகிறார். அதனால் கம்பெனியில் உள்ளவர்கள் தமிழை வெளியே அனுப்புகிறார்கள். அடுத்ததாக தமிழிடம் எங்க முதலாளி உங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மீண்டும் பிசினஸ் தொடங்க சொன்னார் என்று சொல்ல அதற்கு தமிழும் சரி என்று சொல்லி கை கொடுத்து நன்றி என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்புகிறார்.
அப்போது அர்ஜுன் வெளியே நிற்கிறார் வெளியே வந்த தமிழ் அர்ஜுனிடம் என்ன மாப்பிள்ளை எரியுதா என்று நக்கல் செய்ய அதற்கு அர்ஜுன் ப்ளான் பண்ணி என்னோட ஆர்டரை புடிங்கிட்டீங்க என்று பேச அதற்கு தமிழ் பிராடு பண்றது திருட்டு வேலை பார்க்கிறது எல்லாமே உன் வேலை தான். எங்களுக்கு அது கொஞ்சம் கூட வராது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். அடுத்த காட்சியில் கம்பெனிக்கு தமிழ் போகிறார்.
அங்கு அனுப்ப வேண்டிய மெட்டீரியலை அனுப்பாமல் வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து தமிழ் என்ன ஆச்சு என்று கேட்க அங்கிருந்தவர்கள் கார்த்தி தம்பி தான் இரண்டையும் தனித்தனியாக மோல்டிங் பண்ணுங்க என்று சொன்னார். அதனால் லேட்டாகிவிட்டது என்று போட்டுக் கொடுக்கின்றனர். உடனே தமிழ் அனைவர் முன்பும் கார்த்திக்கை திட்டுகிறார்.

உனக்கு கொஞ்சம் கூட சுயபுத்தியே கிடையாது நீ எதுக்கும் உதவ மாட்டியா என்று திட்டு விடுகிறார். இதனால் வீட்டுக்கு வந்த கார்த்தி வீட்டில் எல்லாரிடமும் எறிந்து விழுகிறார். எல்லாரும் என்னாச்சுன்னு கேட்க அப்போது நமச்சி கம்பெனியில் நடந்த விஷயத்தை சொல்கிறார். அந்த நேரத்தில் தமிழும் வீட்டுக்கு வருகிறார். என்ன ஆச்சு ஏன் இப்படி திட்டனும் கேட்க அதற்கு தமிழ் அவன் எல்லாரும் முன்னாடியும் தானே தப்பு பண்ணனான்? எல்லாரும் சொல்லி இருக்காங்க இந்த மாதிரி பண்ண வேண்டாம்னு ஆனா அவங்க பேச்சைக் ஏன் இவன் கேட்கல என்று தமிழ் கோபப்படுகிறார்.
இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஏற்கனவே மேக்னா கதை முடிவடைந்ததும் தமிழுக்கும் கார்த்திக்கும் பிரச்சனை வரும் அப்போது அர்ஜுன் மீண்டும் பழையபடி குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்தி பிரிவு படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது போலத்தான் இப்போது நடந்திருக்கிறது.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications