அர்ஜுனை அடித்து உண்மையை வாங்கும் தமிழ்.. முடிவுக்கு வருகிறதா சீரியல்? கடைசியில் கதை இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பிப்ரவரி எட்டாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அர்ஜுனை கடத்திக் கொண்டு போய் அடித்து தமிழ் உண்மைகளை வாங்குகிறார்.
தமிழ் எப்படி சரஸ்வதியை மேக்னா கொலைபழியில் இருந்து காப்பாற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்று வெளியான ப்ரோமோ இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கும். அதே நேரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி எப்படி ஜெயிலில் இருந்து வெளியே வரப் போகிறார் என்று எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஒரு வழியாக இந்த சீரியலில் அடுத்தடுத்த எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மேக்னாவை கொலை செய்தது யார் என்ற உண்மை மட்டும் தான் இன்னும் வெளிவர வேண்டும்.
அதிலும் இன்று வெளியான ப்ரோமோவில் தமிழும் நமச்சியும் ரோட்டில் நின்று கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வரும் அர்ஜுனும் அவருடைய மாமாவும் வழக்கம்போல தமிழை கலாய்கின்றனர். அதற்கு நமச்சி ஒழுங்கா போயிருங்க உண்மை வெளியே வரும்போது நீங்கதான் கம்பி எண்ணி கலி திங்க போறீங்கன்னு சொல்ல அதற்கு அர்ஜுன் எப்படி இப்போ சரஸ்வதி தின்னுட்டு இருக்காங்களே அந்த மாதிரியா என்று சொன்னதும் தமிழுக்கு கோபம் வந்து அர்ஜுனை போட்டு அடித்து அவருடைய வாயில் துணியை வைத்து கட்டி தன்னுடைய காரில் கடத்திக் கொண்டு போகிறார்.

பிறகு ஒரு இடத்தில் வைத்து உண்மையை சொல்லிவிடு இல்லன்னா இங்கிருந்து போக முடியாது என்று கட்டையால் அடித்து மிரட்டி கொண்டிருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் அடி பொறுக்காமல் அர்ஜுன் உண்மையை சொல்லிவிட்டால் சீரியல் முடிவுக்கு வந்துவிடும். இத்தனை பிரச்சனைகளையும் செய்தது அர்ஜுன் தான் என்று தெரிந்தால் ராகினி அர்ஜுனை விட்டு பிரிந்து விடுவார்.
ஆனால் அர்ஜுனுடைய அப்பாவும் அக்காவும் இறந்ததற்கு கோதை குடும்பத்தினர் காரணம் இல்லை என்ற உண்மையை அர்ஜுனுக்கு அதற்கு முன்பு தெரிய வேண்டும் அப்போதுதான் அவர் திருந்துவார். ஆனால் அதற்கான அறிகுறிகள் இப்போது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அர்ஜுன் ஜெயில் வார்டனுக்கு பணம் கொடுத்திருப்பதால் அவர் சரஸ்வதியை போட்டு பாடாய்படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் எப்படியும் மேக்னா உயிரோடு வந்து உண்மையை சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் அதுவும் நடக்காது என்கிற மாதிரி தான் மேக்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு வெளியிட்டிருந்தார். இதனால் அர்ஜுன்தான் இனி தான் செய்த தப்புகளை ஒத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இனி சரஸ்வதி வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அர்ஜுன் இப்போது தமிழிடம் அடி பொறுக்க முடியாமல் உண்மையை ஒத்துக் கொண்டாலும் பிறகு அர்ஜுன் என்னை அடித்ததால் தான் நான் அப்படி சொன்னேன் என்று கதையை மாத்தி விடுகிற ஆள் தான். அதனால் அர்ஜுனை நம்பவும் முடியாது. இதற்கு ஒரே வழி தமிழ் கலிவரதனை மிரட்டினால் தான் உண்மை வெளிவர வாய்ப்பு இருக்கிறது. காரணம் கலிவரதன் மேக்னாவை கொலை செய்ததே அவருடைய சொத்துக்காக தான்.
ஆனால் சொத்துக்கள் முழுக்க இப்போது யாருக்கும் பயன்படாமல் அனாதை விடுதிகளுக்கும் டிரஸ்டுகளுக்கும் போய்விட்டதால் கலி வருதனும் அவருடைய மகனும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதனால் ஒருவேளை கலிவரதனோ அல்லது அவருடைய மகனோ கூட உண்மையை உளர வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications