கொலை செய்ய வந்த கலிவரதனிடம் இருந்து தப்பித்த மேக்னா.. சரஸ்வதியிடம் சொன்ன வார்த்தை.. எதிர்பாரா முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னாவிற்கு தன்னை அழிக்க நினைத்த கலிவரதன் மற்றும் அர்ஜுன் பற்றிய உண்மை தெரிய வர அதனால் அவர்களிடம் மேக்னா சண்டை போட அவரை கொலை செய்வதற்காக கலிவரதனும் அர்ஜுனும் முயற்சி செய்கின்றனர்.
அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த மேக்னா சரஸ்வதி இடம் தன்னை அர்ஜுன் மற்றும் கலிவரதன் கொலை செய்ய துரத்தி வருவது பற்றி சொல்லி இருக்கிறார். மேலும் சில விறுவிறுப்பான காட்சிகள் இன்றைய எபிசோடில் நடைபெற்றது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மேக்னாவிடம் அனைத்து உண்மைகளையும் உமாபதி சொல்லிவிடுகிறார். ஏற்கனவே தமிழுக்கு கல்யாணம் முடிந்து விட்டது என்பதை பற்றி கலிவரதனிடம் நான் சொல்லி இருந்தேன். ஆனால் அவர் எதற்காக உன்னிடம் மறைத்தார் என்று தெரியவில்லை என்று உமாபதி சொல்ல இதைக்கேட்டு அதிர்ச்சியான மேக்னா எதற்காக இப்படி மாமா பண்ணுனாங்க என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு வீட்டிற்கு வந்து வேலைகார அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொல்ல, அதற்கு அவங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணுறாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கலிவரதன் உள்ளே வருகிறார். அப்போது மேக்னா அவரிடம் இன்னும் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்களா? என்று மேக்னா கலிவரதனை பார்த்து கேட்க அதற்கு என்ன பாப்பா சொல்ற என்று அவர் கேட்கிறார்.
அதற்கு மேக்னா தமிழுக்கு கல்யாணம் ஆனதை உங்ககிட்ட உமாபதி சார் சொல்லிட்டாராமே? அதை ஏன் நீங்க என்கிட்ட இருந்து மறைச்சீங்க? அதனால உங்களுக்கு என்ன லாபம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அப்போது கலிவரதன் சட்டையை பிடித்து கேள்வி கேட்க அதற்கு கலிவரதனின் மகன் மேக்னாவை பிடித்து தள்ளி ஆமாம் நாங்க உன்னுடைய சொத்த எங்களுக்கு மாற்றுவதற்காக தான் இப்படி பிளான் பண்ணுனோம்.

இப்போ உன்னையும் போட்டு தள்ளப் போறோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் மேக்னா அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பிக்க பார்க்க அப்போது கலிவரதன் மகன் வேலைக்கார அம்மாவை பிடித்து தள்ளிவிட்டு மேக்னா கழுத்தை நெறிக்கிறார். அப்போது கீழே கிடந்த கட்டையால் வேலைக்கார அம்மா கலிவரதனின் மகனை அடிக்கிறார். உடனே கலிவரதன் இவர்களை அடிக்க வர அங்கிருந்து தப்பித்து இருவரும் காரில் வெளியே போய்க்கொண்டிருக்கின்றனர்.

அப்போது சரஸ்வதிக்கு போன் பண்ணுகிறார். முதலில் சரஸ்வதி போன் அட்டென்ட் செய்யாமல் இருக்க பிறகு அடிக்கடி ஃபோன் பண்ணிக் கொண்டே இருக்க என்னவென்று சரஸ்வதி கேட்க, பிறகு மன்னிப்பு கேட்டுக் கொண்டே என்னை இப்போ கொல்ல வராங்க எங்களை காப்பாத்துங்க என்று கெஞ்சுகிறார். அதற்கு சரஸ்வதி நீங்க புதிய கம்பெனிக்கு சீக்கிரமா போங்க அங்க நம்ம ஒர்க்கர்ஸ் இருப்பாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
உடனே மேக்னா அந்த பாதையில் செல்ல அங்கு கலிவரதன் அதற்குள் அர்ஜுனனுக்கு போன் செய்து மேக்னா இங்கிருந்து தப்பித்துவிட்டாள் அவளை போட்டு தள்ள வேண்டும் என்று பிளான் போடுகிறார். உடனே அர்ஜுன் தன்னுடைய மாமாவிடம் போன் பண்ணி விஷயத்தை சொல்ல அவரும் மேக்னா காரை பாலோ பண்ணி போய்க் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் சரஸ்வதி ஆட்டோவில் வந்து கொண்டிருக்க ஆட்டோக்காரர் இதற்கு மேலே என்னால் வர முடியாது. நீங்க ஏதோ கொலை என்கிறீங்க எனக்கு புள்ள குட்டி எல்லாம் இருக்கு என்று சரஸ்வதியை நடுரோட்டில் இறக்கிவிட்டு செல்கிறார். இதனால் சரஸ்வதி நடந்து வந்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications