அர்ஜுனால் கொலை பழியோடு ஜெயிலுக்கு போன சரஸ்வதி.. தமிழ் செய்த எதிர்பாராத செயல்.. செம ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஜனவரி 31ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மேக்னாவையும், கமலா அம்மாவையும் அர்ஜுனுடைய ஆட்கள் கொலை செய்துவிட்டு அந்த பழியை சரஸ்வதி மீது தூக்கிப் போட சரஸ்வதி ஜெயிலில் இருக்கிறார்.
அதே நேரத்தில் தமிழ் மருத்துவமனையில் இருந்து சரஸ்வதியை தேடிக் கொண்டிருக்கும்போது சரஸ்வதி பற்றிய செய்தி கிடைத்ததும் தமிழுக்கு மேலும் உடல்நிலை மோசமாகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் மேக்னாவையும் வேலைக்கார அம்மாவையும் கொலை செய்ய அர்ஜுன் ஆட்கள் கம்பெனிக்குள் வர அப்போது மேக்னாவும் அவருடைய அம்மாவும் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக போராடுகின்றனர். ஆனால் பரமு தன்னுடைய ஆட்களோடு அவர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு அங்கு இருந்து ஓடுகிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக காரில் மோதி அர்ஜுனுடைய மாமா பரமு கண்ணாடி உடைந்து கீழே விழுகிறது அது தெரியாமல் அங்கிருந்து ஓடி விடுகிறார். அப்போது சரஸ்வதி அந்த இடத்திற்கு வந்து ரவுடிகளை நில்லுங்கடா நில்லுங்கடா என்று கத்திக்கொண்டே உள்ளே வருகிறார். இங்கே மேக்னாவும் அவருடைய அம்மாவும் ரத்த வெள்ளத்தில் கிடக்க மேக்னாவை சரஸ்வதி மடியில் தூக்கி போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது மேக்னா தமிழிடம் நான் மன்னிப்பு கேட்டதாக சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு இறந்து போய் விடுகிறார். அந்த நேரத்தில் மேக்னா வயிற்றில் இருக்கும் கத்தியை சரஸ்வதி பிடுங்க அப்போது கம்பெனியில் இருந்து ஆட்கள் அனைவரும் பார்த்து விடுகிறார்கள். அதனால் சரஸ்வதி தான் கொலை செய்தது என்று போலீசுக்கு போன் பண்ணி சரஸ்வதியை பிடித்துக் கொடுக்கின்றனர். பிறகு சரஸ்வதி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டிருக்க வீட்டில் எல்லோரும் சரஸ்வதி காணாமல் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது சரஸ்வதிக்கு போன் பண்ணலாம் என்று தமிழ் நம்பருக்கு போன் பண்ணுகின்றனர். அந்த போனை போலிஸ் எடுத்து சரஸ்வதி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். மேக்னா மற்றும் கமலாவை கொலை செய்துவிட்டார் என்று சொல்ல அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.. அங்கு நடந்த அனைத்தையும் சரஸ்வதி குடும்பத்தினரிடம் சொல்லி நான் கொலை பண்ணவில்லை மேக்னா தான் எனக்கு கால் பண்ணுனது..

அவங்கள காப்பாத்த தான் நான் போனேன் கடைசியில் அவங்க வயிற்றில் குத்தி இருந்த கத்தியை பிடுங்கும் போது கம்பெனியில் வேலை பார்க்கிறவங்க எல்லாரும் வந்து விட்டாங்க. அவங்க நான்தான் கொன்னுட்டேன்னு நினைச்சுட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த காட்சியில் தமிழ் இன்னும் சரஸ்வதி வரலையே என்று ரிசப்ஷனுக்கு போய் அங்கிருந்து போன் பண்ணி பார்க்கலாம் என்று ரூமை விட்டு வெளியே வருகிறார்.
அந்த சமயத்தில் வீட்டில் உள்ள எல்லோரும் ஹாஸ்பிடலுக்கு வந்து தமிழிடம் சரஸ்வதி ஜெயிலில் இருக்கிறார் என்று நடந்தது எல்லாவற்றையும் சொல்ல தமிழ் பதறி அடித்துக்கொண்டு நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணும் என்று கிளம்புகிறார். அதற்கு எல்லோரும் இப்போது நீ சரஸ்வதியை பார்க்க முடியாது என்று தடுக்கின்றனர். அப்போது டாக்டர் இந்த நேரத்தில் நீங்க போனா உங்களுக்கு இன்னும் ஆபத்து பெரியதாகிவிடும் என்று கூறுகிறார்.

அடுத்த நாள் காலையில் சரஸ்வதியை நினைத்து தமிழ் மயக்கம் போட்டு விட அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி அவரை சாப்பிட சொல்கின்றனர். மறுபக்கத்தில் மேக்னா மற்றும் கமலாவை கொலை செய்த பழியை சரஸ்வதி மீது போட்டு விட்டாச்சு என்ற சந்தோசத்தில் அர்ஜுன், கலிவரதன், கலிவரதனின் மகன் என எல்லோரும் சந்தோஷத்தில் பாருக்கு போகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications