தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கிளைமேக்ஸ் இதுதான்.. அப்டேட் கொடுத்த கதாநாயகி! இப்படி ஒரு முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த வாரத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் கதை இதுதான் என்று யூகிக்கும் வகையில் இந்த சீரியலின் நடிகர்கள் மற்றும் நடிகைகள் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலை விகடன் முதன்முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதுவரைக்கும் விகடன் ப்ரொடக்ஷன் சன் டிவியில் தான் அதிகமான சீரியல்களை ஒளிபரப்பு செய்திருக்கின்றனர். முதல்முறையாக விஜய் டிவியில் இந்த சீரியல் மூலமாக தான் விகடன் காலடி எடுத்து வைத்திருந்தனர். இந்த சீரியலும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களை தாண்டி 700 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான மவுஸ் இருந்த நிலையில் இப்போது சில மாதங்களாகவே இந்த சீரியலில் வந்த கதையே மீண்டும் மீண்டும் வருவதாக ரசிகர்கள் கூறி வந்தனர். அதே நேரத்தில் இந்த சீரியல் இப்போது திடீரென்று முடிவுக்கு வருகிறது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையோடு இந்த சீரியல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான கடைசி நாள் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது. நேற்று கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதும் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் எல்லோருமே கேக் வெட்டி கொண்டாடி தங்களுடைய மகிழ்ச்சி மற்றும் கஷ்டங்களை பகிர்ந்து இருந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்தடுத்து எல்லா உண்மைகளும் தெரிந்துவிட்டது. இன்றைய எபிசோடில் கோமாவில் இருந்த அர்ஜுன் கண் விழித்திருக்கிறார். தன்னுடைய அம்மா, அக்கா மற்றும் மாமா குடும்பத்திற்காக அர்ஜுன் இதுவரைக்கும் தமிழ் குடும்பத்தை எதிர்த்து வந்த நிலையில் இப்போது அர்ஜுனின் மாமா பரமு அடித்ததால் அர்ஜுன் கோமாவுக்கு போயிருந்தார். ஆனாலும் விடாத பரமு அர்ஜுனை கொலை செய்ய முயற்சி செய்தபோது அர்ஜுன் கண் விழித்திருக்கிறார்.

ஆனால் கண்விழித்த பிறகு அதைப் பற்றி அர்ஜுன் வாய் திறக்காமல் இருக்கிறார். அதே நேரத்தில் ராகிணி சொத்தை இனி அர்ஜுன் பெயருக்கு மாற்ற போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அர்ஜுன் எனக்கு வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும் உறுதியாக ராகிணியை தடுக்கவில்லை. அதனால் அர்ஜுன் கோமாவில் இருந்தாரா என்பதை சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம் கோமாவில் இருப்பவருக்கு சொத்தை எழுதிக் கொடுக்க முடியாது என்று பரமும சொன்ன பிறகுதான் இப்போது அர்ஜுன் கண் திறந்து இருக்கிறார்.
அதேபோல ராகிணி சொத்தை மாற்றக்கூடாது என்று தமிழ் மற்றும் கோதை எல்லோரும் வீட்டிற்க்கே வந்து மிரட்டிட்டு போயிருக்கின்றனர். இப்படியான நிலையில் கடைசி நாள் சூட்டிங் புகைப்படங்கள் என்று இந்த சீரியலில் வசுவாக நடிக்கும் விஜே சங்கீதா வெளியிட்ட புகைப்படங்களில் பத்திர ஆபீசில் எல்லோரும் இருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது. இதனால் பத்திர ஆபீஸில் வைத்து தான் கோதை குடும்பத்தால் அர்ஜுன் அப்பா மற்றும் அக்கா இறக்கவில்லை என்ற உண்மை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தில் வசுவின் அம்மா சரஸ்வதியின் பாட்டி மற்றும் சரஸ்வதி குடும்பத்தினர் என எல்லோரும் வந்து இருக்கின்றனர். இதனால் பத்திர ஆபீசில் வைத்து உண்மையெல்லாம் அர்ஜுனுக்கு தெரிய வந்ததும் தமிழ் குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷன் நடக்கும் அங்கு மொத்தம் குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள் அதோடு சீரியல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications