அர்ஜுன் பேச்சை கேட்டு நாடகம் போட்ட ராகிணி.. அதிர்ச்சி கொடுத்த தமிழ்.. கோர்ட்டுக்கு வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 12ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். அதில் தமிழ் மருத்துவமனை கொடுத்திருப்பதை வைத்து அர்ஜுன் தன்மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்குவதற்காக ராகிணியை வைத்து கேம் விளையாட, கடைசியில் கோதை குடும்பம் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராகிணி அர்ஜுனுக்கு போன் போட்டு தன்னுடைய அண்ணன் தனக்காக ஹாஸ்பிடல் வாங்கி கொடுத்திருப்பது பற்றி பெருமையாக சொல்ல அதற்கு அர்ஜுன் இந்த நேரத்தில் எதுக்காக உங்க அண்ணன் உனக்கு ஹாஸ்பிடல் வாங்கி கொடுக்கணும்? அவங்களுக்கு உன் மீது பாசம் இல்ல... நம்ம மேல கேஸ் கொடுத்துட்டு அவங்க ஹாஸ்பிடல் வாங்கி கொடுத்து இருக்காங்க, இதில் ஏதோ நாடகம் இருக்கு என்று ராகிணியின் மனதை மாற்றுகிறார்.

அதற்கு ராகிணி இல்லை எங்க அண்ணன் என் மேல பாசமாகத்தான் ஹாஸ்பிடல் வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று சொல்ல, அதற்கு அர்ஜுன் உன் மீது உண்மையான பாசம் இருந்தால் உங்க குடும்பத்தினர் கொடுத்த கம்ப்ளைன்டை வாபஸ் வாங்க சொல்லு பாப்போம் என்று ஏத்தி விட அதற்கு ராகினி என்னுடைய அண்ணனுக்கு என் மேல பாசம் இருக்கு. அதனால எனக்காக அவர் எதுவும் செய்வாரு. நான் அவரிடம் பேசுகிறேன் என்று சொல்லி தமிழ் வீட்டிற்கு போகிறார்.
அந்த நேரத்தில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராகிணியை கண்டதும் எல்லோரும் நல்லபடியாக வரவேற்கின்றனர். பிறகு ராகிணி அர்ஜுன் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்காக சொல்ல அதற்கு கார்த்தி மற்றும் நடேசன் அது எங்களால் முடியாது. அந்த அர்ஜுன் எங்களை ஏமாற்றி சொத்தை வாங்கி இருக்கிறார். அவர்களிடமிருந்து நாங்கள் அந்த சொத்தை திரும்ப பெறுவோம் என்று சொல்ல, அதனால் ராகிணி ஏமாற்றம் அடைந்து தமிழிடமும் அண்ணா எனக்காக நீங்க கேஸை வாபஸ் வாங்க மாட்டீங்களா?

உங்களை எல்லாரும் தப்பா பேசுறாங்க என்று ஃபீல் பண்ணி பேச அதற்கு தமிழ் நான் இந்த முடிவில் மட்டும் பின்வாங்க மாட்டேன். அப்பா அம்மா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்துக்களை அவன் ஏமாற்றி எங்களிடமிருந்து வாங்கிட்டான். அதனால இந்த கேஸை வாபஸ் வாங்க மாட்டோம் என்று சொல்லிவிட ஏமாற்றம் அடைந்து ராகிணி வீட்டிற்கு போகிறார்.
அங்கு அர்ஜுனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ராகிணி என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அப்போது ராகிணி தமிழ் வீட்டில் நடந்ததை சொன்னது கேட்டு எல்லோரும் ஏமாற்றம் அடைகின்றனர். அதோடு அடுத்த நாள் கோர்ட்டுக்கு போகணும் என்று அர்ஜுன் குடும்பத்தினர் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் கோர்ட் வாசலில் தமிழ் குடும்பத்தினர் எல்லோரும் வக்கீல் இடம் இந்த கேஸ் நமக்கு சாதகமாக முடியுமா? என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ராகிணி நான் உங்களிடம் எவ்வளவோ கேட்ட பிறகும் நீங்கள் இந்த கேஸ் வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொல்லி என்னை கோர்ட்டுக்கு இழுத்துட்டீங்கல்ல என்று கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications