காணாமல் போன அர்ஜுன்.. காட்டி கொடுத்த மேனேஜர்.. தமிழுக்கு தெரிய வந்த உண்மை.. அதிர்ச்சியில் ராகிணி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த சீரியலில் பார்க்கலாம். அதில் புது ஆர்டர் எடுக்க வேண்டும் என்பதற்காக பிளான் போட்ட அர்ஜுன் தன்னுடைய மாமாவை வைத்து செய்த செயல் தமிழுக்கு தெரிய வந்திருப்பதால் அடுத்த பிளானை போட்டு காணாமல் போய் இருக்கிறார்.
அர்ஜூனை பற்றி தெரியாத ராகிணி வழக்கம் போல தன்னுடைய குடும்பத்தினர் மீது கோபப்பட்டு இருக்கிறார். அதே நேரத்தில் கம்பெனி விஷயத்தில் தமிழ் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கிடைக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தமிழும் கார்த்தியும் புதியதாக ஒரு கம்பெனிக்கு ஆர்டர் விஷயமாக பேசுவதற்கு கிளம்பி போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த கம்பெனியில் இருந்து மேனேஜர் ஃபோன் பண்ணி நீங்கள் இங்கே வர வேண்டாம் நிறைய பேரு ஆர்டர் கேட்பதால் நாங்கள் டென்டருக்கு விடலாம் என்று நினைக்கிறோம்.
புதுசா ஒருத்தர் லட்சுமி இண்டஸ்ட்ரியில் இருந்து வந்து நீங்க கொடுத்ததை விட குறைவான கோட் கொடுக்கிறோம் என்று கெஞ்சி கேட்கிறார். அது எங்க ஓனருக்கும் சரி என்று படுகிறது ஆனால் நாங்கள் தான் அதை சரிப்பட்டு வராது என்று பேசி இருக்கிறோம். நீங்கள் டிரெண்டர் நடக்கும் இடத்திற்கு வந்துடுங்க என்று சொல்ல அதற்கு தமிழ் நீங்க எனக்கு போன் பண்ணி சொன்னதுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லி ராகிணி வீட்டிற்கு கோபமாக கார்த்தியோடு போகிறார்.

அங்கு சென்று அர்ஜுனன் அர்ஜுன் என்று கத்திக் கொண்டிருக்க ராகிணி வாங்க அண்ணா வீட்டுக்கு வாங்க என்று வரவேற்க அதற்கு அந்த அர்ஜுனை எங்கே என்று கோபமாக தமிழ் கேட்க அதற்கு ராகினி அவர் மும்பையில் இருக்கிறார். நாளைக்கு தான் வருவார் என்று சொல்ல அதான் அவன் எங்கே இருந்தாலும் அவனுடைய அல்லக்கை இங்கே எல்லா வேலையும் செய்ய இருக்கானே..
நாங்கள் கம்பெனியில் கோட் கொடுத்து ஒரு ஆர்டர் கேட்டிருந்தால் அந்த கோட்டை விட நாங்கள் குறைத்து தருகிறோம் என்று போய் கெஞ்சி இருக்கிறான் என்று திட்ட அதற்கு அர்ஜுனின் அக்காவும் அம்மாவும் பரமுவுக்கு சப்போர்ட் பண்ணுகின்றனர். அதற்கு தமிழ் உனக்காக மட்டும் தான் நாங்க ஒவ்வொரு முறையும் இந்த அர்ஜுனையும் அவனுடைய குடும்பத்தையும் மன்னிச்சு விட்டுட்டு இருக்கோம். அதை இவன் சாதகமா எடுத்துக்கிட்டு ரொம்ப பண்ணிக்கிட்டு இருக்கான் என்று திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகின்றனர்.

அதைத்தொடர்ந்து ராகிணி பரமுவை திட்ட அதற்கு பரமு நமக்கு மூன்று யூனிட் இருக்கிறது. அதில் வேலை நடக்க வேண்டுமே அதுக்காகத்தான் நாங்க புதுசா ஆர்டர் கேட்டு போனோம் என்று சமாளிக்கிறார். பிறகு அர்ஜுனின் அக்கா உங்க அண்ணன் மிரட்டிட்டு போனதை பார்த்தாலே பயமா இருக்கு ஏதோ என் தம்பிய பண்ணிடுவாங்களோனு எனக்கு தோணுது என்று சொல்ல, அதற்கு ராகிணி அண்ணன் அப்படி எல்லாம் பண்ணக்கூடிய ஆளு கிடையாது என்று சொல்கிறார்.
அதற்கு பரமு ஏன் போன தடவ நடந்தது மறந்து போச்சா? உங்க அண்ணன் அர்ஜுனா கடத்திட்டு போயி அடிச்சாரு என்று சொல்கிறார். அதோடு இங்க நடந்ததை எல்லாம் நான் அர்ஜுனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். ஆனா அர்ஜுன் என்ன ஆனாலும் பரவாயில்லை இதில் இருந்து பின்வாங்க கூடாது என்று சொல்லிட்டான் என்று சொல்ல அதற்கு ராகினி இப்படி அர்ஜுன் எதற்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா செஞ்சிட்டு இருந்தா நான் என்ன பண்ண என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் தமிழ் வீட்டில் அர்ஜுன் செய்த செயல் குறித்து தமிழ் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது நடேசனும் கோதையும் நம்ம கம்பெனியில் மற்ற கம்பெனியை விட பணம் குறைவா தான் ஆர்டருக்கு கோட் பண்றோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த கட்டத்தில் கம்பெனிக்கான ட்ரெண்டரில் தமிழ் கலந்து கொள்கிறார்.
அப்போது அந்த ஓனர் இங்கு இருப்பவர்களில் எல்லாரையும் விட அர்ஜுன்தான் குறைவா கோட் பண்ணி இருக்கிறார். ஆனால் அவர் வரல என்று பேசிக் கொண்டிருக்க அப்போது தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் பேசி அந்த ஓனரின் மனதை மாற்றி ஆர்டரை வாங்குகின்றனர். அந்த நேரத்தில் ராகிணியிடம் பரமு, மாப்பிள்ளை ஏன் டெண்டர் நடக்கும் இடத்துக்கு வரல..? மாப்ள மட்டும் போயிருந்தா கண்டிப்பா நமக்கு தான் கிடைத்திருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ராகிணியும் போன் பண்ணி பார்த்து அவருடைய நம்பர் ஸ்விட்ச் ஆப் என்று வருகிறது என்று குழப்பத்தில் இருக்கிறார். பிறகு அர்ஜுன் பரமுக்கு போன் பண்ணி நான் சொல்ற மாதிரி சொல்லுங்க என்று சில அறிவுரைகளை கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து பரமு சரி என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து நாளைக்காக என்று வெளியான வீடியோவில் அர்ஜுனை காணவில்லை என்று ராகிணி போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்திருந்ததால் போலீஸ் தமிழை அரஸ்ட் செய்ய வந்திருக்கின்றனர்.
-
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications