Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அர்ஜுனை கண்டுபிடித்த தமிழ்.. சிக்கிய சிவனாண்டி.. பரமுக்கு இது தேவையா? ராகிணி நிலைமைதான் பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 18 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் அர்ஜுன் காணாமல் போன அதிர்ச்சியில் இருக்கும் ராகிணிக்கு போலீஸ் போன் பண்ணி பிணவறையில் அர்ஜுனை போலவே ஒரு பிணம் இருக்கிறது வந்து பார்க்க வாங்க என்று கூப்பிடுகின்றனர்.

அதே நேரத்தில் தற்போது வெளியான ப்ரோமோவில் அர்ஜுனை தமிழ் கண்டுபிடித்து இருக்கிறார். ஆனால் அர்ஜுன் மற்றும் அவருடைய மாமா பரமுவை தமிழும் நமச்சியும் பாடாய்ப்படுத்தி எடுக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

tamilum saraswathiyum serial march 18th episode and promo full update

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் பரமு சாப்பாடு வாங்கிக் கண்டு போவதை பின்தொடர்ந்து தமிழும் நமச்சியும் போகின்றனர். ஆனால் பரமு இவர்களை கவனித்து தான் வாங்கிட்டு வந்த சாப்பாடை கோவிலில் வெளியே இருந்து பிச்சைக்காரர்களிடம் கொடுத்துவிட்டு கோவிலில் போய் கடவுளிடம் என்னுடைய மாப்பிள்ளையை சீக்கிரமா கண்டுபிடித்து கொடுத்துவிடு.. அவனை நம்பித்தான் நாங்க எல்லாருமே இருக்கோம் என்று கண்கலங்கி அழுவது போன்று நாடகம் ஆடுகிறார்.

அதை பார்த்த நமச்சி நாம தேவை இல்லாம இவங்க மேல சந்தேகப்படுறோமோ என்று பேசிக் கொண்டிருக்க அதற்கு தமிழ் இல்லை இவன் நாடகம் போடுகிறான் என்று எனக்கு தோணுது என்று சொல்ல ஆனால் நமச்சி அதை நம்ப மறுத்து உண்மையில் அர்ஜுன் காணாமல் போய்விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வீட்டுக்கு வந்த பரமு அர்ஜுனை எங்கேயும் காணவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ராகிணி அர்ஜுனை தேடி எதிர்பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் போன் பண்ணி மார்சுரியில் அர்ஜுனை போலவே ஒரு ஆளோட உடல் இருக்கிறது நீங்க வந்து அடையாளம் காட்ட வாங்க என்று சொல்ல அதற்கு ராகிணி அது அர்ஜுனா இருக்காது என்று கதறி அழுகிறார். பிறகு மார்ஸ்சுவரிக்கு கிளம்பி போகிறார். அப்போது அபி மூலமாக இந்த விஷயம் கோதை குடும்பத்திற்கு தெரிய வர,

என் பொண்ணோட தாலி அவ்வளவுதானா என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். அப்போது தமிழ் மற்றும் நமச்சி இருவருமே அந்த அர்ஜுனுக்கு எதுவும் ஆகி இருக்காது அவனால் தான் எல்லாருக்கும் பிரச்சனையே தவிர அவனுக்கு எந்த பிரச்சனையும் வந்து இருக்காது என்று சொல்லிக்கொண்டு மார்ச்சுவரி போகின்றனர். அங்கு ராகிணி போய் உள்ளிருக்கும் உடலை பார்க்க அது அர்ஜுன் இல்லை என்று வெளியே வந்து அழுது கொண்டிருக்கிறார்.

மற்றொரு பக்கத்தில் தமிழும் நமச்சியும் பரமுவை பாலோ பண்ணி போனது பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராகி டி அண்ணன் நான் இப்பவும் கேட்கிறேன் நீ தான் அவரை எங்கேயும் கடத்தி வச்சிருக்க இல்ல அவர பத்தி ஏதாவது உனக்கு தெரியுமா என்று கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்திருக்கும் நிலையில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் தமிழ் சரஸ்வதியிடம் நான் அர்ஜுன் இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சாச்சு என்று சொல்ல அதற்கு சரஸ்வதி நீங்க அவனை பார்த்தீர்களா? என்று கேட்க, அதற்கு தமிழ் அவன் ஒரு வீட்டிற்குள் இருக்கிறான். அவனை எப்படி வெளியே வர வைக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் என்று சொல்லிக்கொண்டு நமச்சியும் தமிழும் அர்ஜுன் இருக்கும் வீட்டிற்கு வெளியே இருந்து பேய் போல சத்தம் போடுகின்றனர்.

அதோடு சாப்பாடுக்காக கதறிக் கொண்டிருக்கும் தமிழுக்கும் பரமுக்கு வத்தல் பொடி கலந்த சாப்பாடு கொடுத்து தமிழும் நமச்சியும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+