தமிழிடம் சிக்கிய அர்ஜுன்.. கோதை குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ராகிணி.. இது நம்பற மாதிரியா இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அர்ஜுன் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்த தமிழ் அர்ஜுனை பயமுறுத்துவதாக பேய் போல சத்தம் போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் அர்ஜுனை தொடர்ந்து பரமுவும் காணாமல் போனதால் ராகிணி கோதை வீட்டிற்கு வந்து கதறி அழுகிறார். அந்த நிலையில் என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பரமுவிற்கு அர்ஜுனின் அக்காவும் அம்மாவும் போன் போட்டு பார்க்க, பரமுவின் போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதால் அவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. ஒருவேளை அர்ஜுனை பார்க்க போன இடத்தில் பரமு மாட்டிக்கொண்டாரா என்று புலம்பி கொண்டு இருக்க அந்த நேரத்தில் ராகிணி வந்ததும் என் தம்பியை தேடிப் போன என் வீட்டுக்காரரையும் காணவில்லை.
உங்க அண்ணன் தான் அவரையும் கடத்தி வச்சி இருக்காரு என்று அர்ஜுன் அக்கா சொல்ல அதனால் கோபப்பட்ட ராகிணி நான் எங்க அண்ணன் கிட்ட பேசிகிட்டு வாரேன் என்று கோதை வீட்டுக்கு வந்து உன் பையன் தான் என் புருஷனை கடத்தி வச்சிருக்கார்.
இப்போ தேடிப்போன பரமுவும் அண்ணனையும் கடத்திட்டாரு என்று சொல்ல அதற்கு சரஸ்வதி நேற்றுதானே நீ எங்க அண்ணன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குன்னு அவ்வளவு நம்பிக்கையா பேசிட்டு போனா? இன்னைக்கு இப்படி பேசுறியே என்று அட்வைஸ் பண்ணுகிறார். அதோடு தமிழ் கண்டிப்பா இப்படி ஒரு வேலையை செய்ய மாட்டார். உன் மாப்பிள்ளை தான் எங்கயாவது ஒளிஞ்சிருப்பாரு என்று மொத்த குடும்பமும் ராகிணியை சமாதானப்படுத்தி அனுப்புகின்றனர்.
அதைத்தொடர்ந்து தமிழ் வீட்டிற்கு வந்து சரஸ்வதி இடம் அர்ஜுன் மறைந்திருக்கும் இடத்தை நான் பார்த்து விட்டேன். ஆனால் அதைப்பற்றி இப்போ ராகிணியிடம் சொல்ல மாட்டேன். ராகிணிக்கு அர்ஜுன் பற்றி முழு உண்மையும தெரிய வரணும் அதற்காகத்தான் அவன் இருக்கும் இடத்தை சொல்லல என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் அர்ஜுன் மறைந்திருக்கும் வீட்டு வாசலில் நின்றபடி தமிழும் நமச்சியும் பேய் போல சத்தம் போட்டு பயமுறுத்துகின்றனர்
அதோடு ரத்தம் எலும்பு போன்று ஒவ்வொன்றாக அனுப்ப அதை பார்த்து பரமுவும் அர்ஜுனும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.அதே நேரத்தில் அர்ஜுனுக்கு இது தமிழ் மற்றும் நமச்சியின் வேலை தான் என்று சந்தேகம் வருகிறது. ஆனால் பரமு இல்லை இது பேய் தான் என்று பயப்படுகிறார். இந்த நிலையில் இதிலிருந்து அர்ஜுனும் பரமுவும் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதே நேரத்தில் அர்ஜுன் வாயில் இருந்து தமிழ் உண்மைகளை வர வைப்பேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அதை ராகிணி நம்புவாரா என்பது தான் பெரிய கேள்விக்குறி. ஒவ்வொரு இடத்திலும் அர்ஜுன் கடைசியில் தோற்றுப் போய் இருக்கிறார். அது போல இப்போது அர்ஜுன் பற்றிய உண்மைகள் ராகிணிக்கு தெரியுமா? இல்லை என்றால் இப்போது அர்ஜுனை கடத்தியது தமிழ் தான் என்று பழி தமிழ் மீது விழுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications