அர்ஜுனின் கொடூர புத்தியை கண்டுபிடித்த ராகினி.. இப்போதான் சரியான முடிவு..சந்தோஷத்தில் தமிழ் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சிரியலில் மார்ச் 4ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அர்ஜுனனின் நடவடிக்கைகளை பார்த்து ராகினி அதிர்ச்சி ஆகிறார். அதாவது ராகினி மீண்டும் நான் டாக்டர் பயிற்சிக்கு போக வேண்டும் என்று சொல்ல அதற்கு அர்ஜுன் தடை போடுகிறார். இதனால் ராகினி கோபப்படுகிறார்.

அதே நேரத்தில் சரஸ்வதிக்கு கம்பெனியில் உயரிய பதவி கொடுத்ததால் மொத்த குடும்பத்தினரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். கோதை தன்னுடைய மகன் தமிழ் எடுத்த முடிவால் தன்னுடைய குடும்பம் நிம்மதியாக இருப்பதாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

tamilum saraswathiyum serial march 4th episode and promo full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராகினியும் அர்ஜுனும் காரில் போய்க்கொண்டிருக்கின்றனர். அப்போது ராகினி தமிழ் அண்ணன் எல்லோருக்கும் பதவி கொடுத்தது நல்லா இருக்கு என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க அர்ஜுன் நானும் இதை எதிர்பார்க்கல என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு ராகினி தமிழ் அண்ணன் கார்த்தி அண்ணாவை விட்டுக் கொடுக்கல என்று சொல்ல அர்ஜுன் கடுப்பாகிறார்.

அதோடு ராகினி நான் தமிழ் அண்ணா வீட்டுக்கு நாளைக்கு போகணும் என்று சொல்ல அதற்கு அர்ஜுன் எதற்கு நீ அடிக்கடி அங்க போயிட்டு வர்றா என்று சொல்ல நான் எங்க வீட்டுக்கு போக கூடாதா என்று ராகினி கேட்கிறார். அதற்கு அர்ஜுன் நான் போக கூடாதுன்னு சொல்லல ஆனா நமக்குன்னு ஒரு குழந்தை இருக்கு நீ அதனால அங்கு அடிக்கடி போக கடாது என்று சொல்கிறார். இதை கேட்டு ராகினி அதிர்ச்சி அடைகிறார்.

அந்த நேரத்தில் அர்ஜுனுக்கு ஒரு போன் வருகிறது. அப்போது அர்ஜுன் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவருக்கு அடிபட்டுவிட்டது என்று ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறது என்று சொல்ல அர்ஜுனும், ராகினியும் ஹாஸ்பிடலுக்கு போகின்றனர். அங்கு அந்த தொழிலாளிக்கு மருத்துவம் பார்ப்பதற்கு டாக்டர் இல்லாததால் ராகினி நானும் டாக்டர் தான் நானே மருத்துவம் பார்க்கிறேன் என்று சொல்ல அதற்கு அங்கிருந்து நர்ஸ் முடியாது என்று சொல்கிறார்.

பிறகு ராகினி அவர்களின் மனதை மாற்றி ஆப்ரேஷன் செய்து முடித்து விடுகிறார். அந்த நேரத்தில் அங்கு டாக்டர் வந்து நீங்க யாரு இங்கே வந்து ஆப்ரேஷன் பண்ணுவதற்கு என்று திட்டுகிறார். பிறகு உள்ளே வந்து பேஷண்டை பார்க்க பேஷண்டுக்கு சரியான சிகிச்சை கொடுத்து இருப்பதால் ராகினியை பாராட்டி, உங்களோட படிப்பை இப்படி வேலைக்கு போகாமல் வீணாக்குற? நீ எங்கேயாவது டாக்டரா பிராக்டிஸ் பண்ணலாம்ல்லா என்று சொல்கிறார்.

அதற்கு சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பும் ராகினி காரில் வரும்போது அர்ஜுனிடம் இனிமேல் பிராக்டீஸ் பண்ணலாம்னு நானும் இருக்கேன் என்று சொல்ல அதற்கு அர்ஜுன் மறுக்கிறார். நீ டாக்டரா வேலை செஞ்சாலும் யாராவது ஒரு ஓனருக்கு கீழே தானே நீ கைதட்டி நின்னு ஆகணும். அதெல்லாம் வேண்டாம் நமக்கு குழந்தை இருக்கு குழந்தையை நீ பார்த்துக்கணும் என்று சொல்ல அர்ஜுனனின் நடவடிக்கைகளை பார்த்து ராகினி அதிர்ச்சி ஆகிறார்.

நீ என்னுடைய முடிவுகளுக்கு ஆதரவாக இருப்பானு நினைச்சேன். ஆனா இப்படி மறுத்து பேசுற என்று சொல்ல அதற்கு ஆமா நீ கண்டிப்பா வேலைக்கு போகக்கூடாது என்று அர்ஜுன் சொல்லி விடுகிறார். அடுத்த கட்டத்தில் அனைவரும் சரஸ்வதியை ஜிஎம் என கிண்டல் செய்கின்றனர். பிறகு சரஸ்வதி சாப்பிடும் போது ஒரு வாய் சாப்பிட்டதும் வாமிட் பண்ணுகிறார். உடனே வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் பயந்து சரஸ்வதியை ஹாஸ்பிடல் அழைத்துப் போக சொல்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+