ராகினி தோழி மூலமாக தமிழ் குடும்பத்திற்கு தெரிய வரும் உண்மை.. அர்ஜுனுக்கு சரியான ஆப்பு கிடைத்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மார்ச் 7ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராகினி மீண்டும் அர்ஜுன் பேச்சை கேட்டு தமிழ் வீட்டிற்கு வந்து அனைவரிடமும் சண்டை போட்டுக் கொண்டு போகிறார்.
அதே நேரத்தில் ராகினி மருத்துவமனையில் ஒருவருக்கு உதவி செய்தது பிறகு டாக்டர் அவரை பிராக்டிஸ் செய்ய சொன்னது போன்ற விஷயங்கள் நடேசன் மூலமாக தமிழ் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் தமிழ் வீட்டில் இருந்து வந்த ராகினி அர்ஜுனிடம் ஜெயிலில் சரஸ்வதி டார்ச்சர் அனுபவத்திற்கு நீங்க தான் காரணமா? தமிழ் அண்ணா அப்படித்தான் சொல்கிறார் என்று கேட்க அதற்கு அபி உண்மையில் என்ன நடந்துச்சு அதைத்தானே சொல்லுவாங்க என்று சொல்ல அதனால் அர்ஜுன் குடும்பத்தினர் கோபப்பட்டு அபியை திட்டுகின்றனர்.
அதைத்தொடர்ந்து அர்ஜுன் ராகினி இடம் என் மனசுல எவ்வளவு இருக்கு தெரியுமா? உங்க அண்ணன் சொன்னதுக்காக நீ என்னை சந்தேகப்பட்டுட்டியோ ஆனால் அவங்க சொன்னதெல்லாம் நான் என்னைக்காவது உன்கிட்ட சொல்லி இருக்கேனா? சரி விடு ராகினி என்று பீல் பண்ணுவது போல நடிக்க அதைக் கேட்டு ராகினி என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு அர்ஜுன், மேக்னா கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கு என்று அந்த கலிவரதனை அடிச்சு ஒத்துக்க வைக்க போறாங்களாம் என்று சொல்கிறார்.

அதற்கு ராகினி அண்ணன் ஏன் இப்படி செய்யப் போகிறார் என்று கேட்க அதற்கு அர்ஜுனின் மாமா பரமு அப்பதான் அர்ஜுனை பொய் சொல்லி உள்ள தூக்கி வைக்க முடியும் என்று சொல்கிறார். இதனால் ராகினி கோபப்பட்டு நான் நேரில் போய் பேசிட்டு வருகிறேன் என்று தமிழ் வீட்டுக்கு கோபமாக போகிறார். அங்கு எல்லோரும் புது வீடு வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராகினி வந்து வழவழன்னு கத்திக் கொண்டு இருக்கிறார்.
அதற்கு நமச்சி உனக்கு பொறுமையா பேச தெரியாதா? என்று திட்ட அதற்கு ராகினி தமிழிடம் அர்ஜுனை நீங்க உள்ளே தூக்கி வைக்கப் போறீங்களா? கலிவரதனை அடித்து அர்ஜுன் பெயரை சொல்ல வைக்க போறீங்களா? என்று கேட்க அதற்கு தமிழ் சரஸ்வதியை கஷ்டப்படுத்துனவங்க யாரா இருந்தாலும் தப்பிக்க முடியாது. கண்டிப்பா ஜெயில்ல தூக்கி வைப்பேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு ராகினி கடைசியா சொல்லுங்க நீங்க அர்ஜுன ஜெயிலில் வைக்கப் போறீங்களா என்று கேட்க அதற்கு தமிழ் தப்பு செஞ்சவங்க தப்பிக்க முடியாது என்று சொல்ல இதனால் கோபமான ராகினி இதுக்கு மேல எனக்கும் இந்த வீட்டுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஒட்டும் இல்ல உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்த கட்டத்தில் ராகினி வீட்டுக்கு போனதும் அங்கு அர்ஜுன் உங்க அண்ணன் கிட்ட கேக்க போனியே என்ன சொன்னான் என்று கேட்க அதற்கு ராகினி அண்ணன் அவருடைய முடிவுல இருந்து பின்வாங்கவே மாட்டேன் என்று சொல்கிறார்.
கலிவரதன விசாரிச்சு உண்மையை வர வச்சு அர்ஜுனை ஜெயிலில் தூக்கி வைப்பேன் என்று சொல்கிறார். அதனால் எனக்கு அந்த குடும்பமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்ட அர்ஜுன் தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராகினி அந்த குடும்ப பக்கம் போக மாட்டா அது நல்ல விஷயம் தான். ஆனால் இந்த கலிவரதன் மேட்டர் தான் இடிக்குது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடேசன் வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வரும் ராகினியின் தோழி ராகினி மருத்துவமனையில் ஒரு ஆளை காப்பாற்றியது. பிறகு டாக்டர் ராகினியிடம் பிரக்டிசை தொடங்க சொன்னது என எல்லா விஷயத்தையும் சொல்ல அதைக் கேட்டு நடேசன் வருத்தப்படுகிறார். பிறகு இதை வீட்டில் எல்லோரிடமும் சொல்ல எல்லோரும் அது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே












Click it and Unblock the Notifications