தமிழை அழிப்பதற்காக அர்ஜுனுக்கு சப்போர்ட் செய்யும் ராகினி..கதையில் திடீர் மாற்றம்.. சுற்றும் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் தமிழ் பெங்களூரில் மேக்னா ஆபீசில் அவர் வேலை செய்யும் திறமையை பார்த்து அசந்து போய் இருக்கிறார்.

அதே நேரத்தில் தமிழ் பெங்களூருக்கு போய் இருப்பதை தெரிந்து கொண்டு அர்ஜுன் தமிழுக்கு பிரச்சனை கொடுப்பதற்காக ராகினியின் உதவியோடு பெங்களூருக்கு போகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சரஸ்வதி கோதையிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மேக்னாவும் தமிழும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு சரஸ்வதி வந்துவிடாமல் நமச்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மேக்னாவிற்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மேக்னாவின் மாமா இதற்கு மேலே நாம் ஆபீஸ் போய் பேசிக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.
அதோடு மேக்னாவின் மாமா நான் நமச்சியையும் சரஸ்வதியையும் ஹோட்டலில் விட்டுவிட்டு ஆபீசுக்கு வருகிறேன். நீங்க ரெண்டு பேரும் காரில் ஆபீசுக்கு போங்க என்று அனுப்பி வைக்க அதற்கு தமிழும் வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொள்கிறார். அதை தொடர்ந்து தமிழ் மேக்னா ஆபீஸ்க்கு செல்கிறார்.

அங்கு மேக்னா தன்னை பரபரப்பாக காட்டிக் கொள்கிறார். இதை பார்த்து தமிழ் இம்ப்ரஸ் ஆகிறார். 30 கம்பெனிகளையும் ஒரே ஆளாக மேக்னா சமாளிப்பதை பார்த்து பெருமையாக தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார். சாப்பிட கூட நேரமில்லாமல் மேக்னா பிசினஸை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் அர்ஜுனுக்கு தமிழ் பெங்களூர் சென்று இருப்பது தெரிய வந்துவிடுகிறது. தன்னுடைய மாமாவிடம் பெங்களூருக்கு இரண்டு டிக்கெட் போட சொல்கிறார். அதற்கு ராகினி எதற்காக பெங்களூர் போறீங்க என்று கேட்க, அதற்கு அர்ஜுன் தமிழ் அந்த ஆர்டரை முடிப்பதற்காக வேறு ஒரு கம்பெனியை பார்க்க போகிறார்.
அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தினால் தான் அந்த ஆர்டர் நமக்கு கிடைக்கும் ஏனென்றால் நிறைய முறை நான் ஆர்டர் கொடுத்தவுடன் பேசி பார்த்து விட்டேன். அவர்கள் எதற்கும் அசைவது போல தெரியவில்லை. உங்க அண்ணன் தமிழ் எல்லாரிடமும் ஆர்டர் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வைத்து விட்டார் போல,
யாருமே நமக்கு ஆர்டர் கொடுக்கவில்லை என்று அர்ஜுன் பேசிக் கொண்டிருக்க அதை கேட்டு ராகினியும் அண்ணன் ஏன் இப்படி நடந்து கொண்டார்? இவ்வளவு சீப்பா நடந்துக்கிறார்னு தெரியல, உங்களுக்கு கம்பெனிக்கு எது நல்லதுன்னு படுதோ அதையே செய்ங்க என்று கூறிவிடுகிறார். அதை தொடர்ந்து அர்ஜுனும் பெங்களூருக்கு கிளம்புகிறார்.

அந்த நேரத்தில் மேக்னாவின் சோப்பு கம்பெனியில் மிகவும் நஷ்டம் அடைவதால் ஆளுக்கு ஒரு ரீசன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் விலையை குறைக்க வேண்டும் என்று மேக்னாவின் மாமா பையன் அறிவுரை கூற அதற்கு மேக்னா அது நம்முடைய தரத்தை நாமளே குறைச்சிக்கிட்ட மாதிரி ஆகிவிடும் என்று கூறிவிட்டு தமிழ் இடம் ஐடியா கேட்கிறார்.
அதற்கு தமிழ் லிக்விட் மாதிரி அதை மாற்றி செய்யலாம் என்று ஐடியா கொடுக்க இந்த ஐடியா புதுசா இருக்கே எப்படியாவது நம்ம இதை செயல்முறை பண்ணனும் இன்னும் ரெண்டு நாளில் அந்த லிக்விட் மார்க்கெட்டுக்கு வரணும். அதுக்கு உண்டான வேலை பாருங்க என்று மேக்னா சொல்லிவிட்டு சாப்பிட போகலாமா தமிழ் என்று கேட்க இருவரும் சாப்பிட கிளம்புகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications