ராகினி சொத்துக்கு கையெழுத்து போடும் போது தமிழ் செய்த செயல்.. வெளிவந்த உண்மை.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நவம்பர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ராகினி மொத்த சொத்தையும் அர்ஜுனுக்கு எழுதி கொடுப்பதை தடுப்பதற்காக தமிழ் குடும்பத்தோடு சேர்ந்து புது பிளான் போடுகிறார்.

அர்ஜுன் சொத்துக்காக கையெழுத்து போடும் கடைசி நேரத்தில் அதை கோதை தடுத்து நிறுத்துகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராகினி, அர்ஜுனின் மாமா, அர்ஜுன் என மூவரும் வந்து கோதை வீட்டில் அர்ஜுன் மீது ஸ்பேனரை தள்ளி விட சொன்னது நீங்க தான் என குடும்பத்தினரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் ஸ்பேனரை தள்ளிவிட்டவர் நமச்சி தான் எனக்கு காசு கொடுத்து இதை செய்ய சொன்னார் என்று பொய் சொல்லி விடுகிறார்.
இதனால் ராகினி திட்டிவிட்டு சொத்து முழுவதையும் அர்ஜுன் பெயருக்கு மாற்ற தான் போகிறேன். உங்களால் என்ன முடியுமோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று கோபமாக பேசிவிட்டு செல்கிறார். ஆனால் கோதை இது அணைத்தும் நீங்களும், உங்க அப்பாவும் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதித்தது அது போனாலும் பரவாயில்லை.
ஆனால் அந்த அர்ஜுன் கைக்கு போகக்கூடாது. அப்படி போனால் அவன் இன்னும் நமக்கு தொல்லை கொடுப்பான். பணம் நிறைய வந்துச்சுன்னா அவன் நம்மள நிம்மதியா இருக்க விடமாட்டேன். எப்படியாவது இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழிடம் கோதை கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு தமிழ் என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு. நான் வந்து சொல்கிறேன் என்று நமச்சியை கூட்டிக்கொண்டு போகிறார்.
அடுத்தநாள் காலையில் கோதை சரஸ்வதி இருவரும் வாக்கிங் போய்க் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் அர்ஜுன் மற்றும் அவருடைய மாமா இருவரும் கோதையையும் சரஸ்வதியையும் வழிமறித்து மொத்த சொத்தையும் எங்க பேருக்கு இன்னும் ரெண்டு மணி நேரத்துல எழுதி வாங்கப் போறோம் என்று கூறுகின்றனர்.
அதற்கு சரஸ்வதி அது உன் கனவுல கூட நடக்காது. கண்டிப்பா ஆண்டவன் நல்லவங்கள கைவிடமாட்டான். உன்ன மாதிரி அயோக்கியனை ரொம்ப நாள் வைத்திருக்க மாட்டான் என்று திட்டுகிறார். அதற்கு அர்ஜுன் அந்த ஆண்டவன் தான் சொத்து என் கையில கொடுக்கிற படி செஞ்சிருக்காரு. கண்டிப்பா இன்னும் ரெண்டு மணி நேரத்துல ரெஜிஸ்ட்ரேஷன் நடக்கும். அதை நீங்க பார்க்க தான் போறீங்க. எழுதிட்டு வந்து உங்களை மீட் பண்றேன் என்று பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து அர்ஜுன் பேசிட்டு போனதை பற்றி கோதை தமிழிடம் கூற, அதற்கு தமிழ் அவன் ரொம்ப தெனாவட்டா பேசிட்டு போனான். எவ்வளவு வேணாலும் பேசட்டும். இன்னும் கொஞ்ச நேரம் தான் அதுக்குள்ள ஏதாவது பண்ணலாம் என்று கூறுகிறார். அதனால ராகினியே சொத்து மாற்றி எழுதுவதை நிறுத்துவா, அதற்கு என்னிடம் பக்கமாக ஒரு பிளான் இருக்கு என்று தமிழ் சொல்கிறார்.
மறுபக்கம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸில் ரிஜிஸ்டர் அனைத்து டாக்குமெண்ட்டையும் படித்துவிட்டு அர்ஜுனை கையெழுத்து போட சொல்கிறார். அர்ஜுனன் மாமா, அர்ஜுனிடம் மொத்த சொத்துக்கு ஒரே அதிபதி இனி நீ தான். அண்ணா நகர் வீட்டை மட்டும் எனக்கு எழுத தெரியாதா என்று கேட்கிறார்.
அடுத்ததாக ராகினி கையெழுத்து போடும் சமயத்தில் கோதை நிறுத்து என்று தடுத்து நிறுத்துகிறார். அது மட்டும் அல்லாமல் அர்ஜுன்தான் அனைத்து வேலைகளையும் செய்தது. மேலிருந்து பொருளை தள்ளிவிட விட்ட சொன்னார் என்று தமிழ் மீது குற்றச்சாட்டு வைத்த அதே நபரே வந்து உண்மையெல்லாம் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications