தமிழா தமிழாவில் 2024 குரு பெயர்ச்சி பலன்கள்.. நம்பர் 1 இந்த ராசி தானாம்.. உங்க அதிர்ஷ்டத்தை பாருங்க
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான விவாத நிகழ்ச்சி தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ட்ரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் தலைப்புகளை தேர்வு செய்து விவாதங்களையே நடத்தி வருகிறது நிகழ்ச்சி குழு. கடந்த வாரம் கணவனே கண் கண்ட தெய்வம் Vs மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கும் கணவர்கள் என்ற பெயரில் விவாதம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இந்த வாரம் குருபெயர்ச்சி பலன்களை வைத்து நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிய வந்துள்ளது. மே 1-ம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால் 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்? யாருக்கெல்லாம் யோகம் கிடைக்கும், பல வரவு எப்படி இருக்கும் என பல கேள்விகள் மக்களின் மனதுக்குள் ஓடி கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் பதில் கிடைக்கும் வகையில் 12 ராசிக்கான ஜீ தமிழ் பிரபலங்கள் ஒரு பக்கமும் குரு பெயர்ச்சி பலன்களை சொல்லும் ஜோதிடர்கள் ஒருப்பக்கமும் அமர்ந்து குருபெயர்ச்சி பலன்களை கூற உள்ளனர். 12 ராசிக்காரர்களில் யாருக்கு அதிக யோகம் என்று மதிப்பெண் போட்டு கூற உள்ளனர்.
ஜோதிடர்கள் கொடுத்த மதிப்பெண் அடிப்படையில் கன்னி ராசி 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளது, 96 மதிப்பெண்களுடன் விருச்சிகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
இப்படியாக பல விஷயங்களை ஜோதிடர்கள் பகிர்ந்து இருந்தனர். அதோடு விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் மூலம் பிரபலமடைந்த "சுவாதி"யிடம் எதிர்தரப்பில் இருந்த ஜோதிடர் ஒருவர் ரிஷபம் ராசியினர் இந்த வருடத்தில் புது கார் வாங்குவார்கள். அதுவும் அவர்களுடைய சொந்த வருமானத்தில் வாங்குவார்கள் என்று கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சீரியல் நடிகையாகவும் விஜேவாகவும் இருக்கும் லயாவிடம் ஜோதிடர் மேஷ ராசிக்காரங்க வீடு கட்டி முடிச்சிருப்பாங்க. திருமண விஷயத்திற்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. அவார்டு வாங்குற அளவுக்கு அவங்களுக்கு இந்த வருஷம் ப்ரோக்ராம் இருக்கு என்று சொல்ல,
அதற்கு விஜே லயா நான் அவார்ட் வாங்கிட்டேனா.. என்று பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு பலன் சொன்ன ஜோதிடர் அதை எனக்கு கொடுத்துடுவீங்களா? என்று கேட்க, அதற்கு லயாவும் நான் உங்களுக்கே கொடுத்திடுவேன் சார் என்று கூறியிருக்கிறார். இப்படியாக பல கலகலப்பான உரையாடல்களும் ஜோதிடர்களின் விவாதங்களும் நடைபெற்று இருக்கிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications