Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு நாசமா போறதுக்கு காரணமே "இவங்க”தான்.. கடும் கோபத்தில் மாரிமுத்து.. வாக்குவாதத்தில் "பிரபலம்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

அதில் ஒரு பக்கத்தில் ஜோதிடர்கள் தங்களுடைய ஜோதிட குறிப்புகள் மற்றும் பரிகாரங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அதை நம்பாத பொதுமக்கள் அணியில் சிறப்பு விருந்தினராக எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் நடிகர் மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார்.

Tamizha Tamizha Show Astrologers VS People Marimuthu is very angry

அப்போது மாரிமுத்து ஜோதிடத்தை நம்பாமல் பேசிய வார்த்தைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள் குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் எபிசொட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஆரம்பத்தில் ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது பத்திரிகையாளர் ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் அவர் தொகுத்து வழங்கும் இரண்டாவது எபிசோட்டில் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதில் சிறப்பு விருந்தினராக நடிகை நளினி, தொகுப்பாளர் அர்ச்சனா என பலர் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஜோதிடர்கள் சொல்வது உண்மை என்று சில பரிகாரங்கள் ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது என்றும் கூறியிருந்தனர். ஆனால் நவீன பரிகாரங்கள் என்று சொன்ன ஜோதிடர்கள் சொன்னவைகளை குறித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மாரிமுத்து கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.

அதற்கு காரணம் தொகுப்பாளர் ஆவுடையப்பன் ஜோதிடர்களிடம் நவீன பரிகாரங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது ஜோதிடர்கள் சந்திராஷ்டமம் அன்று செல்போனில் செல்பி எடுத்து அதை டெலிட் செய்து விட்டால் நம்மளுடைய பிரச்சனை நாமே சரி செய்வது போன்று ஆகிவிடும் என்று கூறி விளக்கம் கொடுத்தனர்.

அதைக் கேட்டு கடுப்பான நடிகர் மாரிமுத்து இதை கேட்டு கடுமையா எனக்கு கோபம் வருகிறது. அடக்கிட்டு இருக்கேன். இந்த நாட்டுல மன்னிக்க முடியாத குற்றவாளிகள் ஜோசியம் பாக்குறவங்க தான். நம்ம இந்தியா இந்த அளவிற்கு பின் தங்கி இருப்பதற்கு காரணம் ஜோசியக்காரர்கள் மட்டும்தான் என கூறியிருக்கிறார். அதற்கு ஒரு ஜோதிடர் உங்களுடைய புரிதல் தவறாக இருக்கிறது என்று சொல்கிறார்.

அதற்கு நடிகர் மாரியப்பன் என்ன தவறான புரிதல்ன்னு சொல்லுங்க என்று கேட்க, இன்னொரு ஜோதிடர் வாணித ஜோதிடத்தில் இருந்து எல்லாத்துக்கும் முன்னாடி இந்திய ஜோதிடம் தான். இன்னைக்கு நீங்க விடுற ராக்கெட் அந்த காலத்திலேயே விட்டுட்டாங்க. மதுரை எரிச்ச கண்ணகி அன்னைக்கே விமானத்தில் போயிட்டாங்க. எல்லா அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பு இருக்கு என்று கூறுகிறார்.

அதற்கு மாரியப்பன் நீங்க எல்லாரும் ஜோசியக்காரர்கள் தானே என்று கேட்க, அதற்கு அந்த ஜோதிடர் ஜோதிடம் சொல்பவர்கள் வழிகாட்டிகள் என்று சொல்ல, அதை இடைமறித்த மாரியப்பன் மாண்புமிகு முதலமைச்சர் முதலமைச்சர் ஆகவே ஆக மாட்டார் அந்த பாக்கியம் அவருக்கு இல்லவே இல்லன்னு இந்தியாவில் இருக்கிற எல்லா ஜோசியனும் சொன்னான்.

அதுபோல எந்த ஜோசியனாவது 2004 இல் சுனாமி வருமுனு சொன்னானா? எந்த ஜோசியனாவது 2015 ல சென்னை வெள்ளத்தில் முழ்கும்ன்னு சொன்னானா? எந்த ஜோசியனாவது 2020 ல கொரோனா வரணும்னு சொன்னானா? வந்ததுக்கப்புறம் 1008 சொல்லுவாங்க. மன்னிக்கவே முடியாது. இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துட்டு போறவங்க ஜோசியக்காரங்களும் ஜாதகம் பாக்குறவங்களும் மட்டும் தான்.

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த அதே நிமிஷத்துல அதே செகண்ட்ல மட்டும் 57 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருக்கு. ரஜினிகாந்த் மட்டும் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார். மத்தவங்க ஏன் பிச்சை எடுத்துட்டு இருக்காங்க. ரஜினிகாந்த் உழைச்சாரு, கஷ்டப்பட்டாரு, சென்னைக்கு வந்தாரு நடிப்ப கத்துக்கிட்டாரு, பாலச்சந்தரை போய் பார்த்தாரு, உழைச்சதால அவரு சாதிச்சாரு என்று கோபமாக பேசுகிறார்.

அதற்கு அங்கிருந்த பிரபல ஜோதிடர் ஒருவர் அண்ணா நீங்க சாதாரண நடிகர் அண்ணா.. நாங்க யார் தெரியுமா? நீங்க என்ன நினைச்சி பேசிட்டு இருக்கீங்க..? என்று கோபமாக குரலை எழுப்பி நின்றபடி பேச அதற்கு நடிகர் மாரிமுத்து கூலாகவே நான் கடவுளையே நம்பாதவன். உக்காருயா, யாரு நீங்க? என்று எதிர்நீச்சல் குணசேகரன் பாணியிலேயே பதிலடி கொடுக்க, அரங்கமே ஒரு நிமிடம் அமைதியாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+