நடிகை நளினி.. ராமராஜனை போலவே சகோதரனாலும் அதே பிரச்சனை.. காரணம் இதுதானா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜோதிடங்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும்போது மக்கள் என்ற தலைப்பில் விவாதம் வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் சிறப்பு விருந்தினராக நடிகை நளினி கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல பல ஜோதிடர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு ஜோதிடர் நடிகை நளினியின் பிறந்தநாள் குறிப்பை வைத்து அவருடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கூறியிருக்கிறார்.

ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த நிகழ்ச்சி இதுவரைக்கும் கரு பழனியப்பனால் தொகுத்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார். இப்போது கடந்த வார ஞாயிற்றுக்கிழமை முதல் பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக தமிழா தமிழா நிகழ்ச்சி இருந்து வந்தாலும் தற்போது புதிய அத்தியாயத்தில் இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான வரவேற்பு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரத்தில் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது VS போதுமானது இல்லை என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

அதில் பல சின்னத்திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். அதுபோல சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், எம்எல்ஏ விஜயதாரணி, கீதா ஜீவன் போன்ற பெண் பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த அவமானங்கள் கஷ்டங்கள் குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்பட்டு இருந்தது. இது ரசிகர்களின் மத்தியில் வரவேற்பையும் பிடித்து இருந்தது.
அதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும் பொது மக்கள் என்ற தலைப்பில் விவாதம் தொடங்கி இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக விஜே அர்ச்சனா, நடிகை நளினி இன்னும் ஒரு சில நடிகைகள் என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஒரு ஜோதிடர் செல்போன் எண்ணை மட்டும் வைத்து அவருக்கு இப்போது என்ன நடக்கிறது என்பதை கூட என்னால் சொல்ல முடியும் என்று ஒருவர் சொல்ல, அதை தொடர்ந்து இன்னொரு பெண் ஜோதிடர் ஜாதக அமைப்பு படி அவர்களுக்குரிய வேர்களை எடுத்து சாம்பிராணியா நான் கொடுக்கிறது ரொம்ப ஸ்பெஷல் என்று சொல்ல, இன்னொரு ஜோதிடர் எண்ணியல் அதாவது பிறந்தநாள் குறிப்பை வைத்து அதற்கு உரிய பிரச்சனைகளை என்னால் சொல்ல முடியும் என்று கூறுகிறார்.

27-08-1967 என்று நடிகை நளினி தன்னுடைய பிறந்தநாள் தேதியை சொல்ல, அதற்கு ஜோதிடர் மூன்றாம் இடத்தில் மாந்தி என்கிற ஒரு கிரகம் இருக்கு. அப்போ சகோதரஸ்தானத்தில் ஒரு மன குழப்பத்தில் இருக்காங்க என்று சொல்கிறது என்று சொல்ல, அதற்கு அடுத்து இன்னொரு ஜோதிடர் அடுத்த மூணு வருஷம் நாலு மாசத்துல அரசியல் ரீதியான தொடர்புகள் இருக்கு என்று சொல்ல எல்லாத்துக்கும் நடிகை நளினி தலையாட்டிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ஆவுடையப்பன் மேடம் அவர் சொல்றது எல்லாம் உங்களுக்கு ஒத்துப் போகிறதா? என்று கேட்க, அதற்கு நளினி ஆமாம் எல்லாமே ஒத்து போகிறது என்று கூறுகிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராமராஜன் மற்றும் நடிகை நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இவர்கள் இருவருக்கும் ஜாதக பொருத்தம் சரி இல்லை என்ற காரணத்தினால் தான் இருவரும் விவாகரத்து செய்ததாக நடிகை நளினி பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் அதுபோலவே தற்போது சகோதர ஸ்தானத்திலும் பிரச்சனை இருப்பதால் நடிகை நளினி இதையெல்லாம் நம்ப வேண்டாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இன்னொரு தரப்பு ரசிகர்கள் இதற்கெல்லாம் பரிகாரம் இருக்கிறது அதை செய்தால் போதும் அதற்காக யாரையும் விட்டு விலகாதீர்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications