கடவுளுக்கே இருக்கு.. உங்க புருஷன் 2 பொண்டாட்டி வைத்தா தப்பா? விபரீதமாக பேசிய பெண்! யார் தெரியுதா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ப்ளூ கலர் துப்பட்டா அணிந்த பெண் பேசியதுதான் சோசியல் மீடியாவையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் இப்ப விவாகரத்து சரியான முடிவு என்று சொல்பவர்கள் மற்றும் அட்ஜஸ்ட் பண்ணி வாழலாம் என்று சொல்பவர்கள் தலைப்பில் விவாதம் நடந்தது. அப்போது தான் ஒரு பெண், உங்க கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணி வாழ வேண்டியதுதானே என்று பேசியதுதான் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழா தமிழா நிகழ்ச்சியில் சில நேரங்களில் வரும் தலைப்புகள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தும் அதுபோலத்தான் இந்த வார தலைப்பு கூட பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியில் திருமணத்தால் பட்ட வேதனைகளில் இருந்து தப்பிப்பதற்கு விவாகரத்து தான் சரி என்று சில பெண்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எதிர் பக்கத்தில் இருந்தவர்கள் நீங்கள் என்ன நடந்தாலும் சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு வாழ வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். அவர்கள் பேசியதை கேட்டால் இந்த காலத்திலும் இப்படி எல்லாம் யோசிக்கிறார்களே என்று சொல்வது போல தான் இருந்தது.

தமிழா தமிழா எபிசோடு
அதிலும் ஒரு பெண் சொல்கிறார், என்னுடைய கணவர் என் குழந்தைகள் முன்பே என்னை அடித்து உடலுறவு கொண்டார். என் மண்டை உடைந்து கண்களில் இருந்து ரத்தம் வழிந்தது. இப்படிப்பட்டவருடன் நான் எப்படி அட்ஜஸ்ட் பண்ணி வாழ முடியும் என்று கேட்கிறார். அதற்கு எதிர் தரப்பில் இருந்த ப்ளூ கலர் துப்பட்டா அணிந்த பெண், நீங்கள் சொல்வதை எல்லாம் நம்ப முடியல... நீங்க சொல்றீங்க என்பதற்காக அதை நாங்கள் முழுசா ஏத்துக்க முடியாது. இன்னொரு தரப்பு வாதத்தையும் கேட்டால் தான் என்னால் சொல்ல முடியும் என்று சொல்கிறார்.
அப்போது இன்னொரு பெண், என்னுடைய கணவர் கல்யாணம் முடிந்து நான் அவருடைய வீட்டிற்கு போன பிறகு ஆன்லைனில் பல பெண்களிடம் பேசிக் கொண்டிருப்பார். நான் பிசினஸ் விஷயமாக பேச வேண்டும் நீ வெளியே போ என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு நாளும் பல பெண்களை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து கதவை பூட்டிக் கொண்டு அவர்களுடன் தனியாக இருப்பார் என்று கண் கலங்கியபடியே சொல்ல, அதற்கு எதிர் தரப்பில் அதே ப்ளூ ஷால் போட்ட பெண் இப்போது குதர்க்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்.
ஆண்களுக்கு பலமான சப்போர்ட்
அதாவது, நீங்க கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு கூட 2 மனைவி இருக்கும் போது உங்களுடைய கணவர் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருப்பதில் என்ன தவறு? அவருக்கு அப்படி இன்னொரு பெண்ணிடம் போகிறார் என்றால் அவருக்கு என்ன தேவை என்பதை நாம் கேட்கணும், அவர் அப்படி போவதற்கு என்ன காரணம் என்று நாம புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் தொகுப்பாளர் ஆவுடையப்பன், நீங்க என்ன மனநிலையில் இப்படி பேசுறீங்க என்று உங்களுக்கே புரிகிறதா? கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வது போல மனைவியும் இன்னொருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்கிறார்.
என்ன மனநிலை இது
அதற்கு அந்த ப்ளூ கலர் ஷால் போட்ட பெண் ,அதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்கிறார். உடனே கோபப்பட்ட தொகுப்பாளர் நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா? என்று கேட்க, அதற்கு அந்த பெண் நான் மனநல ஆலோசகராக இருக்கிறேன். 150-க்கும் மேற்பட்ட க்ளைன்ட் என்கிட்ட இருக்கிறாங்க. ஆண்கள் என்றால் அப்படி இப்படி இருப்பாங்க. அதை அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டும் என்று அவர் மீண்டும் சொல்ல, உடனே தொகுப்பாளர் நீங்க படிச்சு தான் வேலை பாக்குறீங்களா? சந்தேகமா இருக்கு, ஆண்கள் எப்படி போனாலும் பரவாயில்லை என்று நீங்கள் நார்மலைஸ் பண்ணுறீங்களா? பெண்கள் என்றால் அடி வாங்கிக் கொண்டு அவரை கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லுறீங்களா என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.
அந்த பெண் யார்
சோசியல் மீடியா முழுக்க இந்த பெண்ணைத்தான் இப்போது திட்டி தீர்த்து வருகிறார்கள். அவருடைய சோசியல் மீடியா அக்கவுண்ட் கூட இப்போ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த ஐடியில் அவர் தவெக கட்சிக்கு சப்போர்ட் செய்து அதிகமான வீடியோக்கள் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இவர் உண்மையில் டாக்டரா? என்பதுதான் பலருக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் பிஏ, பிஎல் படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இவர் எப்படி கவுன்சிலிங் கொடுக்கிறார் என்று பல விவாதம் இப்போ எழுந்து வருகிறது.




Click it and Unblock the Notifications
