சென்னையில் ₹441, பெங்களூருவில் ₹1700 வரை டாக்ஸிக் டிக்கெட் விலை.. பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: யாஷ் ரசிகர்கள் இத்தனை நாட்களாக காத்திருந்த அந்த நாள் நெருங்கிவிட்டது. கேஜிஎப் 2 படத்திற்கு பிறகு யஷ் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் என்பதால் டாக்ஸிக் மீது ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்போது படம் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் டிக்கெட் விலையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் டாக்ஸிக் படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் சுமார் 12000 திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் முன்பதிவுக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Taxic ticket price

டிக்கெட் விலை

தற்போது வெளியாகி உள்ள டிக்கெட் விலையின் விவரங்களின்படி சென்னையில் ஐமேக்ஸ் காட்சிக்கு ஒரு டிக்கெட் விலை ரூ441 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெங்களூரில் ஐமேக்ஸ் டிக்கெட் 1200 முதல் 1700 வரை இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதாவது சென்னையில் ஒரு டிக்கெட் விலை 2 பேர் படம் பார்க்கும் அளவுக்கு இருக்கும் நிலையில், பெங்களூரில் ஒரு ஐமேக் டிக்கெட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

ஆனால் இது எல்லா தியேட்டரிலும் ஒரே மாதிரியான விலை கிடையாது. திரையரங்கம், ஸ்கிரீன் வகை, இருக்கை மற்றும் காட்சிக்கு ஏற்ப கட்டணம் மாறுபடுகிறது. பெங்களூரில் சில பிரீமியம் காட்சிகளுக்கான விலை இன்னும் அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

படத்தின் தரம்

டாக்ஸிக் படத்தை சாதாரணமாக பார்த்தால் போதுமா? இல்லை ஐமேக்ஸில் பார்த்தால்தான் அந்த அனுபவம் முழுமையாக கிடைக்குமா? என்பதுதான் இப்போது ரசிகர்களிடம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. படம் 2D, IMAX 2D, 4DXபோன்ற பல்வேறு வடிவங்களில் வெளியாகிறது. இதனால் வழக்கமான திரையரங்கை காட்டிலும் பிரீமியம் வடிவங்களில் டிக்கெட் விலை அதிகமாக கேட்பது இருப்பது இயல்புதான். அதுவும் டாக்ஸிக் தரமான கமர்சியல் படமாக மட்டும் உருவாகப்படவில்லை. பெரிய அளவில் ஆக்ஷன் காட்சிகள், பிரம்மாண்ட செட் என பல ஸ்பெஷல் இருப்பதாகவும் அது ஒரு பெரிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறதுகதை

டாக்ஸிக் படத்தின் கதை

டாக்ஸிக் படத்தின் கதை கோவாவை மையமாகக் கொண்ட கேன்ஸ்டர் பின்னணியில் நகர்கிறது. போர்ச்சுகீசிய ஆட்சி முடிவுக்கு வரும் காலகட்டத்தில் அதிகாரம், துரோகம், வன்முறை உறவுகள் ஆகியவற்றுக்கு இடையில் கதாநாயகன் எப்படி தனது இடத்தை உருவாக்குகிறார் என்பதே படத்தின் மையமாக இருப்பதாக கூறப்படுகிறது. யாஷ் ராமா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

அவருடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாணமே நடித்துள்ளது. ரிலீசுக்கு முன்பே டாக்ஸிக் படத்தின் முன்பதிவு பல இடங்களில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பெங்களூரில் ஒரு மணி நேரத்தில் 25,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் முன்பதிவு வசூல் ஏற்கனவே கோடி ரூபாயை தாண்டி இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+