Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகை ஷகிலா பகீர்.. "மொத்தமா போச்சே, பூஜ்ஜியத்தில் இருந்து".. அதைவிடுங்க அப்போ "அந்த" கட்சி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை ஷகிலாவின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது... இதைகேட்டு அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு போயுள்ளனர்.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து இருப்பவர் ஷகிலா.. கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர்.. பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஷகிலா..

ரியாலிட்டி: கவர்ச்சி தவிர, காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.. சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.. சில சீரியல்களும் அடக்கம்.

Television actress shakeela says about her property, and education qualification, what happened

இவரது யூடியூப் பேட்டிகள் சமீபத்தில் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களிடம் ஷகிலா கேட்கும் கேள்விகள் அனைத்துமே வெளிப்படையானவை.. துணிச்சலானவை.. அதேபோல, ஷகிலா சொல்லும் பதில்களும், கருத்துக்களும்கூட, ஒளிவுமறைவு இல்லாமல் பேசும் பேச்சுக்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தந்து வருகிறது..

போட்டியாளர்: எதற்கும், யாருக்கும் பயப்படாமல் தன் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் ஷகிலா. சமூக சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருபவரும்கூட. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதுதான், ஷகிலாவின் சமையல் திறமையும், வெளிஉலகுக்கு தெரியவந்தது..

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, ஷகிலா அம்மா என்றே அவரை ரசிகர்கள் உரிமையுடன் அழைக்க தொடங்கிவிட்டனர்... இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஷகிலா சொன்ன விஷயம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.

Television actress shakeela says about her property, and education qualification, what happened

வாடகை வீடு: "விக்கிபீடியாவில் இருப்பதை போல எனக்கு சொந்தமாக வீடு, பிஎம்டபிள்யூ கார் எதுவும் கிடையாது.. நான் 40 வருஷமா வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன்... நான் ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பாதித்த காலமெல்லாம் இருந்தது. நடிப்பின் மூலம் நிறைய சம்பாதித்திருந்தாலும், அவற்றையெல்லாம் என் தங்கச்சி எடுத்துட்டு போய்ட்டார்..

வீட்டில் பணத்தை வச்சிருந்தா வருமான வரி சோதனையில் சிக்கிவிடக் கூடும், அதனால், பத்திரமாக நானே வைத்துக்கொள்கிறேன் என்று வாங்கி கொண்டு போனவர், கடைசியில் என்னை ஏமாற்றிவிட்டார். அதனால் நான் மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து என் வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன்" என்றார்.

ஷகிலா சொன்ன இந்த அதிர்ச்சி தகவல்தான் இணையத்தில் வட்டமடிக்கிறது.. பேசாமல், அரசியலில் உங்கள் ஈடுபாட்டை அதிகமாக்குங்கள், உங்களை போன்ற சமூக அக்கறை மிக்கவர்களே, இப்போதைய காலகட்டத்தில் அதிகம் தேவை என்று ரசிகர்கள் உரிமையுடன் ஆலோசனை சொல்லி வருகிறார்கள்.

Television actress shakeela says about her property, and education qualification, what happened

பிரச்சாரம்: ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸில் இணைந்தவர்தான் ஷகிலா.. கட்சியில் சேர்ந்ததுமே, அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.. இதற்கான நியமனத்தை அத்துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அன்றே பிறப்பித்திருந்தார்.. விரைவில் உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டு, அக்கட்சிக்காக பிரச்சாரம் செய்வார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன.

அடிப்படையில் ஷகிலா ஒரு அரசியல்வாதி இல்லை.. மக்களுக்காக சிறை சென்றவர் இல்லை.. எந்தவித போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டவரும் இல்லை... நூற்றாண்டு கால காங்கிரஸ் கட்சியின் அருமை பெருமைகள், உயிரையே தந்த தியாகிகள் குறித்தெல்லாம் முழுவதுமாக ஷகிலாவுக்கு தெரிய வாய்ப்பில்லை, இருந்தாலும் அவருக்கு முக்கிய பொறுப்பு தரப்படுகிறதே என்று சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகின.

நம்பிக்கை: மேலும், பிரபலங்களை வைத்து, ஓட்டுக்களை எடுக்கும் வியூகத்தை பாஜகவை போலவே, காங்கிரசும் முயற்சிப்பதாக சலசலப்புகள் கிளம்பின.. ஆனால், அதற்கு பிறகு, பெரிய தாக்கம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை.. ஓட்டுக்களை அள்ள வெறும் பரிச்சயமான முகங்கள் மட்டும் போதுமா? என்ற கேள்வியையும் தாண்டி, "சமூக அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவை வழங்க மக்கள் தயாராகவே இருப்பார்கள், இது ஷகிலாவுக்கும் பொருந்தும்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+