அந்த நடிகர் முன்னேற கூடாது.. முடிச்சு விடுங்க! PRக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த.. 3 எழுத்து மூத்த நடிகர்
சென்னை: கோலிவுட்டில் ஒரு பரபரப்பான செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஒரு முன்னணி தமிழ் நடிகர் தனக்கு போட்டியாக இருக்கும் இளம் நடிகர் ஒருவருக்கு எதிராக கடுமையான, பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. அதாவது PR மூலம் காசு கொடுத்து வதந்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் மீது எதிர்மறை விமர்சனங்களை பரப்பியதாக குற்றச்சாட்டு
திரைப்படத் துறையின் உள்ளே இருந்து வரும் தகவல்களின்படி, இந்த முன்னணி நடிகர், தனது நட்சத்திர அந்தஸ்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்றொரு முன்னணி நடிகர் குறித்து எதிர்மறையான செய்திகளைப் பரப்ப, ரகசியமாக PR குழுக்களுக்கு பணம் கொடுத்து வருகிறார். அந்த இளம் நடிகர் சமீபத்தில் தனது இயல்பான நடிப்பு மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் மூலம் பார்வையாளர்களிடையே அதிக அன்பைப் பெற்று வருகிறார்.

முக்கியமாக அவர் நடித்த படம் ஒன்று 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பெற்றது . இது மூத்த நடிகருக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியதாக உள் நபர்கள் கூறுகின்றனர்.
முக்கியமாக அந்த நடிகரின் பர்சனல் வாழ்க்கையை பற்றி கடுமையான விமர்சனங்களை வைக்கும் விதமாக PRஐ பரப்பி வருகிறாராம். முக்கியமாக நமக்கு பிறகு நடிகராக வந்தவர்.. நம்மை தாண்டி சென்று கொண்டு இருக்கிறாரே.. பேமிலி ஆடியன்ஸை பிடித்துவிட்டாரே என்ற கோபத்தில் இந்த நடிகர் இருக்கிறாராம். இதன் காரணமாகவே , பணம் கொடுத்து PR குழுக்கள் மூலம் அந்த நடிகரை பற்றிய களங்கத்தை இந்த மூத்த நடிகர் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
நடிகைக்கு எதிராக PR
ஆனால் கதை இத்துடன் முடிவதில்லை. இன்னொரு நடிகை ஒருவருக்கு எதிராகவும் அந்த நடிகர் நெகட்டிவ் PRஐ பரப்பி வருகிறாராம்.
துணிச்சலான, திறமையான மற்றும் வெளிப்படையான அந்த நடிகை, ஒரு காலத்தில் இந்த நடிகருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர். ஒரு திரைப்படத்தில் அவரது நடத்தைக்கு எதிராக இவர் பேசியதாக கூறப்படுகிறது. அப்போதிருந்து, இரண்டு பேருக்கும் ஆகாது என்று கூறப்படுகிறது. அந்த நடிகை சமீபத்தில் காப்பிரைட் விவகாரம் ஒன்றில் எடுத்த நிலைப்பாடு இவரை கடுப்பாக்கி உள்ளதாம். இது மூத்த நடிகருக்கு பிடிக்கவில்லை என்று திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது.
முக்கியமாக அந்த நடிகை வெளியிட்ட சில அறிக்கைகள், அவரின் சில பேட்டிகள் இந்த மூத்த நடிகரை கடுப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. தற்போது, பணம் கொடுத்த PR குழுக்கள் அந்த இளம் நடிகர் மற்றும் நடிகை இருவரின் பிம்பத்தையும் கெடுக்கும் நோக்கில், போலி செய்திகளையும் பழைய விவகாரங்களையும், குடும்ப விஷயங்களையும் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. கட்டுரைகள், சமூக ஊடக பதிவுகள், சில செய்திகள், வீடியோக்கள் கூட இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுவரை அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், "எதிர்மறை செய்திகளின்" திடீர் அதிகரிப்பு ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்று பலர் கருதுகின்றனர்.
உண்மை வெளிவருமா? இளம் நடிகர் அல்லது நடிகை பதிலளிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தற்போதைக்கு, கோலிவுட் கிசுகிசுக்களால் நிரம்பி வழிகிறது.












Click it and Unblock the Notifications