நடிகை வெளியிட்ட பகீர் வீடியோ ஆதாரம்.. பிரபல நடிகருக்கு தடை.. சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு முடிவு
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக இருந்த ரவிவர்மா மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது ரவிவர்மா அடுத்து வரும் மூன்று சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு சங்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் எதற்காக ரவிவர்மா மீது இப்படி ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் கடந்த முறை சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக ரவிவர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவர் மீது நிதி மோசடி குறித்து சிலர் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கின்றனர். அதன் காரணமாக அடுத்த சிவன் தலைவராகவும் போஸ் வெங்கட் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இவர்கள் இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பு போன முறை தலைவராக இருந்த ரவிவர்மா அவரது பதவிக்காலத்தில் நடிகர் நடிகைகளை மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு கூட்டிட்டு போய்ருந்த நிலையில் அங்கு 11 லட்சம் பண மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்ததை தொடர்ந்து அவர் மீது தாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த தேர்தலில் இந்த பிரச்சனையின் காரணமாகவே ரவிவர்மா தோல்வி அடைந்தார்.
இருந்தாலும் அவருடைய அணியில் இருந்த நடிகர் ராஜ்கிரண், பிக் பாஸ் தினேஷ் போன்ற ஒரு சிலர் வெற்றி பெற்று இருந்தார்கள். அவர்கள் இப்போது உள்ள போஸ் வெங்கட் அணியில் தொடர்ந்து பதவியில் இருக்கின்றனர். ஆனாலும் போஸ் வெங்கட் அணி வெற்றி பெற்றதுமே பழைய நிர்வாகத்தில் நடந்த தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

அது போல புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ் வெங்கட் அணியினர் முதல் முறையாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி இருந்தனர். அதில் ரவிவர்மா மீது பண மோசடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அவர் மீது இன்னொரு புகார் கொடுக்கப்பட்டது. அதாவது சீனியர் நடிகை ஒருவர் ரவிவர்மா தலைவராக இருந்த போது வாய்ப்பு கேட்டு அணுகியதாகவும் அதற்கு ரவிவர்மா தான் சொல்வதை செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று சர்ச்சைக்குரிய வகையில் அந்த நடிகை இடம் பேசியதாகவும் அந்த நடிகை புகார் ஒன்றை வீடியோவில் பேசி அனுப்பி இருக்கிறார்.
அந்த வீடியோவை பொதுக்குழுவில் உறுப்பினர் முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நிதி மோசடியோடு சேர்ந்து இந்த புகார் சேர்ந்து கொண்டதால் ரவிவர்மாவுக்கு சிக்கல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் கூட்டத்தில் பிக் பாஸ் தினேஷ் உட்பட ஒரு சிலர் ரவிவர்மாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியப்படியே இருந்தார்களாம்.












Click it and Unblock the Notifications