நடிகையுடன் அரைகுறை ஆடையில் தனிமையில் இருந்த நடிகர்.. அடித்து மனைவி வெளியிட்ட வீடியோ! தப்பா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாக தெலுங்கு நடிகர் ஒருவருடைய வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் நாட்டுப்புற பாடல்களை ஆல்பம் பாடல்களாக நடித்து வெளியிட்டு வரும் நடிகர் ஒருவர் அவருடைய மனைவிக்கு தெரியாமல் தன்னுடன் ஆல்பம் பாடலில் நடித்த நடிகையுடன் ஒரே ரூமில் ஒன்றாக இருந்திருக்கிறார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மனைவி நேரடியாக அந்த ஹோட்டலுக்கு சென்று கணவரையும் அந்த நடிகையும் அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவில் அவரை வெளியிட்டு இருக்கிறார். இதுதான் இப்போ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சாதாரணமாக பொதுமக்களில் யாரேனும் கணவன் மனைவிக்கு தெரியாமல் இன்னொருவருடன் தொடர்பில் இருந்தாலும், மனைவி கணவனுக்கு தெரியாமல் இன்னொருவருடன் தொடர்பில் இருந்தாலோ அது பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் ஒரு பிரபலமான நடிகர் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அந்த சம்பந்தப்பட்ட நடிகரின் மனைவியே வீடியோ வெளியிட்டு இருப்பது பெரிய அளவில் பேசப்படுகிறது.

Eeshwar Sai Controversy actor Telugu Cinema

நடிகையுடன் சிக்கிய நடிகர்

ஆனால் அவர் அந்த வீடியோவை வெளியிட்டு ஆதங்கத்துடன் பேசுகையில், என்னுடைய கணவர் ரொம்ப நல்லவர். இந்த நடிகை தான் என்னுடைய கணவரின் மனதை மாற்றிவிட்டார். இந்த நடிகைக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பிரேக்கப் ஆனது அப்போ கூட நான் தான் அவங்களுக்கு ஆறுதலா இருந்தேன். ஆனால் அவர் கடைசியில் என்னுடைய வாழ்க்கையிலேயே எனக்கு துரோகம் ஏற்படுத்திவிட்டார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று அந்த நடிகரின் மனைவி கேட்டிருக்கிறார்.

திருமணத்தை மீறிய உறவில் நடிகர்

அதோடு அந்த வீடியோவில் நடிகரின் மனைவி நேராக ஹோட்டலுக்கு நுழையும் போது அரைகுறை உடையுடன் அந்த நடிகை கட்டிலில் அமர்ந்திருக்கிறார். அந்த நடிகர் பாத்ரூமுக்குள் ஒளிந்திருக்கிறார். போன வேகத்திலேயே அந்த பெண் நடிகையை கன்னத்தில் அறைந்து விட்டு பிறகு தன்னுடைய கணவரை பாத்ரூம் வாசலில் நின்று கத்தி கூப்பிட அவரும் வெளியே வருகிறார். பிறகு அவருக்கும் ரெண்டு அடி போடுகிறார். இதுவெல்லாம் அந்த வீடியோவில் இருக்கிறது.

Telugu actor Eeshwar Sai Controversy actor Telugu Cinema

நடிகர் மனைவி வெளியிட்ட வீடியோ

கடைசியாக கணவரை அந்த ரூமில் இருந்து அரைகுறை உடையுடனே கையை பிடித்து இழுத்துக் கொண்டு காருக்கு வருகிறார். கார் பக்கத்தில் வந்தும் விடாமல் அவரை அடித்து கத்திக் கொண்டிருக்கிறார். இந்த காட்சிகளை பார்க்கும் நெட்டிசங்கள் குடும்பத்தில் கணவர் துரோகம் பண்ணிவிட்டார் என்பதற்காக அதை எதற்காக சோசியல் மீடியாவில் வீடியோவாக வெளியிட வேண்டும்? அப்போ நீங்க உங்க கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லையா? அப்படி விருப்பமில்லை என்றால் கூட நீங்க இப்படி செஞ்சது தப்பு என்று பேசி வருகிறார்கள். இதுதான் இப்போ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நெட்டிசன்களின் விவாதம்

ஒரு கணவன் மனைவிக்கு துரோகம் செய்திருக்கிறார். அதுகூட தவறு இல்லையாம்.. அந்த வீடியோவை நடிகர் மனைவி வெளியிட்டது தான் தவறு என்பது போல சிலர் எப்படி பேசலாம் என்று சில ரசிகர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு நெட்டிசன்கள் நாங்கள் கணவர் செய்தது சரி என்று சொல்லவில்லை. ஆனால் அதன் நடிகருக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அந்த குழந்தை சில வருடங்கள் கழித்து இந்த வீடியோவை பார்த்தால் மனது எவ்வளவு வேதனைப்படும்? தன்னுடைய அப்பா இப்படிப்பட்டவரா என்று வருத்தப்படுமே.. இதுபோன்று வீடியோவை ஏன் வெளியிட வேண்டும் கணவன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றால் அவரை தண்டிக்கலாம் அல்லது வேண்டாம் என்று அவரை விட்டு விட வேண்டியதுதானே என்று கேட்கிறார்கள்.

ரசிகர்கள் கேள்வி

ஆனால் ரசிகர்கள் இதுபோன்று நடிகர்கள் சிலர் மனைவிக்கு துரோகம் செய்தால் இதே போல நிலைமை வரும் என்று பயம் ஏற்பட வேண்டும் அதற்காகத்தான் அந்த பெண் இப்படி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார், அவர் செய்தது தப்பு இல்லை என்றும் அந்த பெண்ணுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். ஆனால் இதில் சம்பந்தப்பட்ட நடிகையைப் விமர்சிப்பதை விடவும் இந்த வீடியோ வெளியிட்ட நடிகரின் மனைவியை தான் சிலர் குறி வைத்து திட்டி வருகிறார்கள். இதுதான் இப்போ பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தப்பு செய்தவர்களை கூட இவ்வளவு திட்டல ஆனால் வீடியோ வெளியிட்டதற்காக அந்த நடிகர் மனைவியை திட்டணுமா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+